| அவலோகிதம் உதவி |
|
|
|
அவலோகிதம் - ஒரு தமிழ் யாப்பு மென்பொருள் ஆகும். பண்டைய தமிழ் மஹாயான பௌத்தர்கள் தமிழ் மொழியை உபதேசித்தவராக கருதிய, சர்வபுத்தர்களின் மஹாகருணையின் உருவகமாக விளங்கும் பகவான் போதிசத்துவர் அவலோகிதேஸ்வரின் பெயர் இடப்பட்டது.
ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான கீழ்க்கண்ட யாப்பு உறுப்புகளை வெளியிடும்:
இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.
செய்யுள் இட வேண்டிய வழிமுறைகள்
பிழைகள், உதவி, பரிந்துரை மற்றும் சந்தேகங்களுக்கு This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற முகவரிக்கு மின்னஞ்சல் இடவும் அடிக்கடி கேட்கப்படக்கூடிய :) கேள்விகள்
வெண்பாவின் யாப்பு விதிகள்(வெண்டளை, சீர் வாய்ப்பாடு, ஈற்றசை வாய்ப்பாடு) முதலியவை அனைத்தும் பொருந்தி வருகிறதா எனப்பார்க்கவும். வெண்பாவிற்குரிய யாப்பு விதிகள் மீறப்படும் நிலையில், அதற்கு நெருங்கிய வெண்பாவின் இனமாகிய வெண்டுறை பொருத்தி அதுவே காட்டப்படும்.
ஒரு பா வகையின் யாப்பு விதிகள் மீறப்பட்டால், அதற்கு நெருங்கிய பாவினம் பொருத்தப்படும்.
சில இடங்களில் குறிப்பிட்ட பா வகையினை பொருத்துவதற்காக, சில விதிவிலக்குகள் உள்ளன. அவையே புறநடை. இதன்படி, பொதுவாக ஒற்றெழுத்தாக கருதப்படும் ஆய்தம், சில இடங்களில் குற்றெழுத்தாக கருதப்படும். அதே போல, உயிரளபெடை நெட்டெழுத்தாக கருதப்படும். சில இடங்களில் குற்றியலுகரம் அலகிடாது விடப்படும்.
இவை அனைத்தும் தளை தட்டாமல் இருக்கவும், ஒரு குறிப்பிட்ட பா வகையினை பொருத்தவும் செய்யப்படும் அந்த சமயம் மட்டும்செயல்படுத்தப்படும் விதிவிலக்குகள். இவை யாவும் பொதுவாக விதிகள் கிடையாது. ஆகவே, இப்போதைக்கு அவை செயல்படுத்தப்படவில்லை.
ஆகவே, கீழ்க்கண்ட மாற்று வழிகளை கையாண்டு, பா வகை அலகிடுதலை மாற்றலாம். ஆய்தத்தை குற்றெழுத்தாக கையாள, ஃ’வை கு’வுடன் பிரதீயீடு செய்யலாம்.உயிரளபெடையில் உள்ள அளபெடுத்த உயிரெழுத்தை நீக்கலாம். அலகிடக்கூடாத எழுத்தை அடைப்புக்குறிக்குள் இடலாம்.
சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் அலகிடுதல் சாத்தியம் ஆகும்.
அந்நிலையில், குறிப்பிட்ட விதத்திலான அலகிடுதலை செயல்படுத்த, / குறியை இட்டு, அசை பிரித்த சொல்லாக உள்ளீடு கொடுக்கவும்.
உதாரணமாக: கலை/யோ/டு என்றவாறு.
திரைகள்முகப்பு
செய்யுள் பகுப்பாய்வு முடிவுகள்அசை-சீர் வாய்பாடு மற்றும் பா வகை
தளை
அடி
மோனை
எழுத்து
குறிப்புதவி1. யாப்பிலக்கணம், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், 1939 - நூலகம்.ஆர்க் 2. தமிழ் இணைய கல்விக்கழகம் - http://www.tamilvu.org/courses/degree/d031/d0312/html/d0312ind.htm 3. யாப்புலகம் - கவிதை இயற்றிக் கலக்கு - திரு.பசுபதி - https://groups.google.com/d/msg/yappulagam/Umr4M2rOzQs/xaSw4OecQbIJ |








