Virtual Vinodh

மற்றவை
நியூமராலஜி என்னும் ஏமாற்றுவேலை Print E-mail

numero-saturnடிவியில் எந்த சேனலை திருப்பினாலும் நியூமராலஜி சம்மந்தமான நிகழ்சிகளே ஒளிபரப்பாகிக்கொண்டு இருப்பதை காண முடிகிறது. இது போன்ற நிகழ்சிகளில் பங்குபெறுவோரின் அபத்தமான கேள்விகளும் அதற்கு அந்த எண்கணித நிபுணர்(?) தரும் அதிஅபத்தமான பதில்களும் கிட்டத்தட்ட இவற்றை நகைச்சுவை நிகழ்சியாகவே ஆக்கிவிடுகிறது. இதற்காகவே நேரம் தவறாமல் இது போன்ற நிகழ்சிகளை பார்ப்பவர்களில் நானும் ஒருவன்.

உதாரணத்திற்கு ஒரு சில நிகழ்வுகளை பகிர்கிறேன். ஒரு நியூமரலஜிஸ்ட் பெயரின் இறுதியில் ‘தி’ என்றே எழுத்தே வரக்கூடாது என்றும், கூப்பிடும் போது அது ‘தீ’ என்றே ஆகி விடுவதால், வாழ்வில் பல பிரச்சினைகள் வரும் என்று ஒரு அதிஅற்புதமான Logic நிறைந்த பதிலை கூறினார். . இன்னொருவரோ செந்தில் என்றே பெயரை வைக்கவோ கூப்பிடவோ கூடாது என கண்டிக்கிறார், இப்படிச்செய்தாலும் வாழ்வில் பிரச்னைகள் வருமாம். அட நாராயணா, கடவுளின் பெயரை கூப்பிட்டால் கூட பிரச்னைகள் வரும் என்னும் சொல்லும் இவர்களின் அறிவுஜீவித்தனத்தை என்னவென்பது. இன்னொன்ரு பெயரை சுருக்கவதால் ஆயுள் சுருங்கி விடுமாம், ஆக ஒரு மைல் நீளத்துக்கு பெயர் வைத்துக்கொண்டால் ஆயிர்மாண்டு காலம் வாழலாமா என்ன ?  பணத்தை வாரி இறைத்து  இதை எல்லாம் நம்பும் மக்களின் நிலைதான் பரிதாபகரமானது.

நியூமராலஜியை இவர்கள் ஒரு அறிவியல் என வருணித்தாலும் இதில் நிறைய லாஜிக் இடிப்பதை காணலாம்.

 
என்.ஹெச்.எம் ஃபைலை திருத்துவது எப்படி Print E-mail

தமிழ் இணைய பரப்பில் அதிகம் பயன்படுத்தப்படுவது என்.ஹெச்.எம் ரைட்டர் தான். அதன் விசைப்பலகைகளை நமக்கு ஏற்றவாறு எப்படி மாற்றிக்கொள்வது எனப்பார்ப்போம்..

 

 

என்.ஹெச்.எம் ரைட்டர் தன்னுடைய விசைப்பலகைகளை எக்ஸ்,எம்.எல் ஃபைலாக வைத்துக்கொள்கிறது. ஆகவே, அவற்றை மாற்றி அமைப்பது மிகவும் சுலபமான காரியம்.
எக்ஸ்.எம்.எல் ஃபைல்’களை $/Program Files/NHM Writer/Data என்னும் ஃபோல்டரில் காணலாம்.
 

 

உதாரணத்துக்கு ஃபோனட்டிக் கீ-போர்ட் லே-அவுட்டை எடுத்துக்கொள்வோம்.

 

அதை, Right-Click செய்து ஓபன் - வித் நோட்பேடு என்பதை தேர்வு செய்யவும்.

 

அப்படி திறந்தால்.. கீழ்க்கண்டவாறு தகவல்களை காணலாம்..

 

 

<Table> 
<Header> 
<Language>Tamil</Language> 
<Encoding>Unicode</Encoding> 
<Keyboard>Phonetic-Extended</Keyboard> 
<LCID>0449</LCID> 
<Author>NHM</Author> 
<Description>UNICODE is a 16-bit encoding designed by Unicode 
Consortium</Description> 
</Header> 
<Data> 
<Map> 
<Display>0B85</Display> 
<Character>0B85</Character> 
<Keys>61</Keys> 
</Map>

 

[....]