Virtual Vinodh

மதம்
ஓம் நமோ புத்தாய - 1 Print E-mail

buddha-sky-edited
vinayaka_quote_grantha 
|| யோ த⁴ர்மம்ʼ பஸ்²யதி ஸ பு³த்³த⁴ம்ʼ பஸ்²யதி ||
|| எவர் தர்மத்தை காண்கிறாரோ அவர் புத்தரை காண்கிறார் ||

-- சாலிஸ்தம்ப சூத்திரம்


 

Tamil_OMபொதுவாகவே, பௌத்தம் என்று நவீன காலங்களில் சுட்டப்படுவது, பெரும்பாலும் நூதன-பௌத்த (Neo-Buddhism) கருத்துக்கள் தாம். நூதன பௌத்தம் என்பது எவ்வித பாரம்பரியமுமற்ற எங்குமே கடைப்பிடிக்கப்படாத ஒரு போலி உருவாக்கம். விக்டோரிய தூய்மைவாத கருத்துகளும், மேற்கத்திய (பொய்ப்)பகுத்தறிவு (Rationalism) கருத்துக்களும், கொஞ்சம் தொட்டுக்கொள்ள தேவையான அளவு தேரவாத பௌத்த கருத்துக்களும் கலந்து உருவாக்கப்பட்ட செயற்கையான கலவை. இந்த மேற்கத்திய செயற்கை கருத்தாக்கம் தான் இந்தியாவிலேயே மறுஅறிமுகம் செய்யப்பட்டு, அதுவே பௌத்தத்தின் வெகுஜன முகமாக இன்று பரிணமித்திருக்கிறது.
 
இந்தியாவின் பௌத்த மத புனர்நிர்மாணம் இந்திய பௌத்த பாரம்பரியங்களை அடிப்படையாக கொள்ளாது, அதை விடுத்து, மேற்கத்திய பௌத்த கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்திய பெருங்கண்டத்தை சுற்றியிருந்த தேசங்களில் உள்ளோரெல்லாம் பௌத்தம் கற்றுக்கொண்ட இடங்களாக காஞ்சியும், தக்ஷசீலமும், விக்ரமசீலமும், நாளந்தாவும் இருந்த நிலையில், பௌத்த கருத்துக்களை மேற்கத்திய தேசங்களில் இருந்து இறக்குமதி செய்வது அபத்தமான விஷயம். 
 
பலர் எண்ணுவது போல, பௌத்தம் ஒரு ஒற்றைப்படையான கருத்தாக்கம் இல்லை. தன்னுள் பலவிதமான பிரிவுகளையும் பாரம்பரியங்களையும் கொண்டது. புத்த பகவான் மஹாபரிநிர்வாணம் அடைந்த பிறகு சில நூறுவருடங்களிலேயே, பல சங்கபேதங்கள் நிகழ்ந்து - பௌத்தத்தில் பல பிரிவுகள் உண்டாகின. 
 
 
மஹா மங்கள சூத்திரம் Print E-mail
 
மஹா மங்கள சூத்திரம், மிகவும் பிரசித்தி பெற்ற தேரவாத பௌத்த சூத்திரம் ஆகும். 
 
இந்த சூத்திரம் “பரித்தம்” என்ற உபபிரிவில் வந்து சேரும். பரித்தங்கள் என்பவை மங்களத்தன்மைக்காகவும், ரக்ஷைக்காகவும் உச்சாடனம் செய்யப்படுபவை....

ஏவம்ʼ மே ஸுதம்ʼ: ஏகம்ʼ ஸமயம்ʼ ப⁴க³வா ஸாவத்தி²யம்ʼ விஹரதி ஜேதவனே அனாத²பிண்டி³கஸ்ஸ ஆராமே. அத² கோ² அஞ்ஞதரா தே³வதா அபி⁴க்கந்தாய ரத்தியா அபி⁴க்கந்தவண்ணா கேவலகப்பம்ʼ ஜேதவனம்ʼ ஓபா⁴ஸேத்வா யேன ப⁴க³வா தேனுபஸங்கமி, உபஸங்கமித்வா ப⁴க³வந்தம்ʼ அபி⁴வாதே³த்வா ஏகமந்தம்ʼ அட்டா²ஸி, ஏகமந்தம்ʼ டி²தா கோ² ஸா தே³வதா ப⁴க³வந்தம்ʼ கா³தா²ய அஜ்ஜ²பா⁴ஸி. 
 
ப³ஹு தே³வா மனுஸ்ஸா ச மங்க³லானி அசிந்தயும்ʼ,
ஆகங்க²மானா ஸோத்தா²னம்ʼ ப்³ரூஹி மங்க³ல முத்தமம்ʼ. 
 
அஸேவனா ச பா³லானம்ʼ பண்டி³தானஞ்ச ஸேவனா, 
பூஜா ச பூஜனீயானம்ʼ ஏதம்ʼ மங்க³லமுத்தமம்ʼ. 
 
பதிரூபதே³ஸவாஸோ ச புப்³பே³ ச கதபுஞ்ஞதா, 
அத்தஸம்மாபணிதி⁴ ச ஏதம்ʼ மங்க³லமுத்தமம்ʼ. 
 
யார் பிராமணர் ? வாசெட்ட சூத்திரம் Print E-mail
[திரிபிடகம் --> சூத்திர பிடகம் ---> மஜ்ஜிம நிகாயம் --> பிராமண வர்க்கம் --> வாசெட்ட சூத்திரம்]
 
(ஸ்ரீலங்கா புத்த சாசன அமைச்சக வெளியீட்டில் இருந்து...)
 
Dharma_Chakra_by_elvenmuseநான் பின்வருமாறு கேள்வியுற்றேன். ஒரு சமயம் புத்த பகவான் “இச்சாநங்கல” என்னும் கிராமத்தில் “இச்சாநங்கல” எனப் பெயரிய சிறுகாட்டில் எழுந்தருளி இருந்தார்கள். அக்காலத்தில் பலவாறு புகழ் பெற்ற செல்வம் படைத்த அந்தணர்கள் இச்சாநங்கல கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். அந்த அந்தணர்களின் பெயர்கள் வருமாறு: சங்கீ பிராமணர், தாருக்க பிராமணர், பொக்கரஸாதி பிராமணர், ஜாணுஸ்ஸோணி பிராமணர், தோதெய்ய பிராமணர் முதலியோரும் செல்வம் படைத்த புகழ்மிகு இன்னும் பல பிராமணர்கள்.

அக்காலத்தில் பாதங்களுக்கு சுகம் தரும் நோக்கில் கால் நடையாகச் சென்ற வாசெட்டர், பாரத்வாஜர் ஆகிய இரு இளைஞர்களுக்கிடையில் பின்வரும் விவாதம் நிகழ்ந்தது.

”அன்புடையீர், ஒருவர் எங்ஙனம் பிராமணர் என்னும் நிலையினை அடைவார் ? “ பாரத்வாஜ இளைஞர் பின்வருமாறு கூறினார். “அன்புடையீர், ஏதோவொரு காரணத்தினால் ஒருவர் தாய் பக்கத்தினாலும் நற்பிறப்புடையவராக விளங்குகிறாரோ ஏழாவது பிதாமகர் காலம் வரை தூய தாய் வயிற்றுடையவராக விளங்குகிறாரோ பிறப்பினைக் குறித்து துரத்தப்படாதவராகவோ நிந்திக்கப்படாதவராக விளங்குகிறாரோ அத்தகையவர் பிராமணர் எனப்படுவார்.” என்றார். அதற்கு வாசெட்ட இளைஞர், “அன்புடையீர், ஒருவர் சீலமுடையவராக அல்லது ஒழுக்கமுடையவராக விளங்குகிறாரோ அவர் பிராமணர் என்ப்படுவார்” என்றார். பாரத்வாஜ இளைஞர் வாசெட்ட இளைஞரை இணங்கவைக்க முடியவில்லை.
 
திரைலோக்கியவிஜயரும் சிவனும் Print E-mail
சர்வ ததாகத தத்துவ சங்கிரஹம் என்னும் வஜ்ரயான (பௌத்த தாந்த்ரீக) நூலில் வஜ்ரபாணி சிவனை அடக்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. காரணடவியூஹ சூத்திரத்தில் தானே அவலோகிதேஸ்வரரிடம் புத்த வியாகரணம் கேட்பதாக விபரிக்கப்பட்ட அதே வேளையில், இங்கு சிவன் வஜ்ரபாணியினால் அடக்கப்பட்டு, பஸ்மேஸ்வர புத்தராக புத்தத்துவம் எய்த இருப்பதை உணர்வதாக சர்வ ததாகத தத்துவ சங்கிரஹம் குறிப்பிடுகிறது. இந்த நிகழ்வின் சுருக்கம் பின்வருமாறு.
 

அனைத்து தேவர்களும் சுமேரு வருகை

 
sarva_vid_vairocana_croppedஒரு சமயம் சுமேரு மலையின் உச்சியில் அனைத்து புத்தர்களும் ஒரு மண்டலத்தை உருவாக்குவதற்காக வஜ்ரபாணியை தன்னுடைய குலத்தை சேர்ந்த அத்தனை பரிவார தேவர்களை அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர். இருப்பினும் வஜ்ரபாணி இதற்கு மறுப்புத்தெரிவிக்கிறார். உலகில் தர்மத்தை ஏற்றுக்கொள்ளாத மகேஸ்வரன் போன்ற தேவர்கள் இருப்பதாகவும் அனைத்து புத்தர்களாலேயே இவர்களை அடக்காத போது, தான் எவ்வாறு அவர்களை இங்கே அழைத்துவருவது என கேள்வி எழுப்புகிறார். 
 
உடனே மகாவைரோசன புத்தர் சமாதி நிலை அடைகிறார். அதன் பலனாக வஜ்ரபாணி திரைலோக்யவிஜய (மூவுலகத்தையும் வெற்றிக்கொள்பவர்) உருவத்தை எய்துகிறார். மேலும் மகேஸ்வரனையும் அவருடைய பரிவார தேவர்களையும் மேரு மலையின் மேல் பிரசன்னமாகுமாறு செய்கிறார். உடனே வஜ்ரபாணி அவர்களை நோக்கி தர்மத்தை ஏற்றுக்கொண்டு புத்தரிடமும் தர்மத்திடமும் சங்கத்திடமும் சரண் புகுமாறு ஆணையிடுகிறார். அவ்வாறு சரணமடைந்து சர்வஞானத்தையும் அடையுமாறு கூறுகிறார்.
 
 
சிவனின் புத்த வியாகரணம் Print E-mail
எவ்வாறு வைதீகம், புத்தரை நாராயணனுடைய அவதாரங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டதோ. அதேபோல, பௌத்தமும் சிவனை வருங்காலத்தில் புத்தத்துவம் அடைபவர்களில் ஒருவாராக கருதுகிறது.
 
பௌத்த சூத்திரமான காரண்டவியூஹ சூத்திரத்தி்ல் சிவன் தனக்கு புத்த வியாகரணத்தை கேட்பது விரிவாக தெரிவிக்கிப்பட்டுள்ளது. 
 
காரண்டவியூஹ சூத்திரத்தின் ஆரம்பத்தில் கௌதம புத்தர் கூடியுள்ள அனைவருக்கும் தர்ம உபதேனை செய்வதை விவரிக்கும் பகுதியில் இந்திரனும் மற்றும் இந்திரலோகத்து தேவர்களும் மஹேஸ்வரன் மற்றும் நாராயணன் ஆகியோரின் தலைமையில் அனைவரும் புத்தரின் உபதேசனையை கேட்க வந்ததாக விவரிக்கிறது. 
 
avalokitesvara_chenrezigசாக்கியமுனியான கௌதம புத்தர் தர்மத்தை உபதேசிக்கும் வேளையில் அவலோகிதேஸ்வர போதிசத்துவரின் பெருமைகளையும் கௌதம புத்தர் விவரிக்கின்றார். [புத்த நிலையை அடையப்போகும் நிலையில் இருப்பவர்கள் போதிசத்துவர்கள். அவலோகிதேஸ்வர அனைத்து புத்தர்களுடைய கருணையின் உருவகமாக கருதப்படுபவர் - மஹாகாருணிகமூர்த்தி] அப்போது மஹேஸ்வரன் அவலோகிதேஸ்வரரின் நெற்றியில் இருந்தும் நாராயணன் அதே அவலோகிதேஸ்வரரின் நெஞ்சுப்பகுதியில் இருந்து பிறந்ததாக கூறுகிறார். மஹேஸ்வரன் அவலோகிதேஸ்வரரின் தேகத்தில் இருந்து தோன்றியவுடன் அவலோகிதேஸ்வர போதிசத்துவர் மஹேஸ்வரனை பார்த்து, “மஹேஸ்வரா, தர்மம் மறையும் காலக்கட்டத்தில் உன்னையே சிலர் ஆதிதேவன் என்றும், உலகத்தை சிருஷ்டித்தவன் என்றும் கூறுவர்கள். அப்போது மக்கள் அனைவரும் புத்த தர்மத்தையும் போதி நிலை அடைவதற்கான வழிமுறைகளையும் மறந்திருப்பர்” என அவலோகிதேஸ்வரர் கூறியதாகவும் கௌதம புத்தர் உபதேசிக்கின்றார்
 
<< Start < Prev 1 2 Next > End >>

Page 1 of 2