| கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம் - 1 - உயிரெழுத்துக்களும் சார்பெழுத்துக்களும் |
|
|
|
|| ஜயது ஸம்ʼஸ்க்ருʼதம் - வத³து ஸம்ʼஸ்க்ருʼதம் || जयतु संस्कृतम् - वदतु संस्कृतम् ||
![]() ப்³ரஹ்மணேஸத்த்வரூபாய ரஜோரூபாய விஷ்ணவே
தமோரூபமஹேஸா²ய ஜ்ஞாநரூபாய தே நம:
ब्रह्मणेसत्त्वरूपाय रजोरूपाय विष्णवे
तमोरूपमहेशाय ज्ञानरूपाय ते नमः
||
|| ஆதி³பு³த்³த⁴ த்³வாத³ஸ²க ஸ்தோத்ரம் | आदिबुद्ध स्तोत्रम् ||
நேரடி பொருள் :
ப்ரஹ்மாவுக்குஸத்த்வரூபனுக்கு ரஜோரூபனுக்கு விஷ்ணுவுக்கு
தமோரூபமஹேசனுக்கு ஞானரூபனுக்கு அவருக்கு வணக்கம்
விளக்கமான பொருள்:
ஸத்த்வரூபத்தில் ப்ரஹ்மாவாகவும் ரஜோரூபத்தில் விஷ்ணுவாகவும், தமோரூபத்தில் மஹேசனாகவும் ஞானரூபனாகவும் இருக்கும் ஆதிபுத்தருக்கு வணக்கம்
இந்தப் பதிவில் அக்ஷரங்கள் குறித்து காண்போம். கிரந்தாக்ஷர பதிவுகளில் தேவைக்கும் அதிகமாகவே, சமஸ்கிருத அக்ஷரங்களை குறித்த விபரங்களை எழுதிவிட்டபடியால், இந்தப்பதிவும் (அடுத்து வரப்போகும் பதிவும்) பெரும்பாலும் ஏற்கனவே ஆங்கிலத்தில் கிரந்தாக்ஷரம் குறித்து எழுதியதின் மொழிபெயர்ப்பாகவே இருக்கும். இவற்றை ஏற்கனவே படித்திருந்தால், பொறுத்துக்கொள்ளவும் :-)
நெடுங்கணக்கு என்பதை சமஸ்கிருதத்தில்
உயிரெழுத்துக்கள் : ஸவரங்கள்உயிரெழுத்தை சமஸ்கிருதத்தில்
अ आ इ ई उ ऊ ऋ ॠ । அ ஆ இ ஈ உ ஊ ருʼ ரூʼ ऌ ॡ ए ऐ ओ औ । லுʼ லூʼ ஏ ஐ ஓ ஔ
சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் உள்ள பொதுவான ஸ்வரங்கள் 10. அவையாவன,
அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஔ | अ आ इ ई उ ऊ ए ऐ ओ औ
தமிழில் இல்லாத ஸ்வரங்கள் நான்கு -
ரு ரூ லு லூ | ऋ ॠ ऌ ॡ
இவற்றை உச்சரிக்கும் முறை:
உயிரெழுத்துக்களை
குறில் - நெடில் - அளபெடை : ஹ்ரஸ்வம் - தீ³ர்க⁴ம் - ப்லுதம்சமஸ்கிருதத்தில் உயிரெழுத்துக்களை மாத்திரைகளை வைத்து மூன்றாக பிரிப்பர். அவை -
கீழ்க்கண்ட 5 அக்ஷரங்களும் ஹ்ரஸ்வங்கள் :
அ இ உ ருʼ லுʼ | अ इ उ ऋ ऌ
மேற்கண்டவை தவிர்த்த 9 அக்ஷரங்களும் தீ³ர்க⁴ங்கள் :
ஆ ஈ ஊ ரூʼ லூʼ ஏ ஐ ஓ ஔ | आ ई ऊ ॠ ॡ ए ऐ ओ औ
லௌகிக சமஸ்கிருதத்தில் ஏகாரம் மற்றும் ஓகாரத்தின் ஹ்ரஸ்வ வடிவங்களான “எ” மற்றும் “ஒ” இல்லை. ஆனாலும் வைதிக சமஸ்கிருதத்தில் இந்த ஒலிகள் உண்டு. ஏகாரம் மற்றும் ஓகாரத்தின் மீது விசேஷ வைதிக குறிகள் இடுவதன் மூலம் இவ்வொலிகள் குறிப்பிடப்படுகின்றன.
ப்லுத அக்ஷரங்களை இன்னும் பார்க்கவில்லை அல்லவா ? பொதுவாக, தமிழைப்போலவே சமஸ்கிருதத்தில் ப்லுத வடிவங்களுக்கு தனி வரிவடிவம் கிடையாது. தமிழில் மாத்திரையை நீட்ட, நெட்டிழுத்துக்கு இனமான குறில் எழுத்தை சேர்ப்பர் - மரூஉ - என்பதைப்போல ; இங்கு ஊகாரத்தை நீட்ட, குறில் ‘உ’கரம் இடப்பட்டது.
ஆனால், சமஸ்கிருதத்தில் மாத்திரை அளவின் “எண் வடிவம்”, நெடில் எழுத்தின் பக்கத்தில் இடப்படும்.
இணை எழுத்து : ஸந்த்⁴யக்ஷரம்சமஸ்கிருதத்தில் இணை எழுத்துக்கள்
தமிழில் ஐ (அ+இ), ஔ (அ+உ) ஆகிய இரண்டு மட்டுமே இணை எழுத்துக்களாக கருதப்படுகின்றன.
ஆனால் சமஸ்கிருதத்தில்,
ஏ ஐ ஓ ஔ | ए ऐ ओ औ
மேற்கண்ட நான்கும் ஸந்த்⁴யக்ஷரங்கள் ஆகும். இவை இரண்டு ஸ்வரங்களின் ஸந்தி⁴யினால் (புணர்ச்சி) உருவாகின்றன என்பது இவற்றுக்கு ஸந்தி⁴ அக்ஷரங்கள் என்று பெயர்.
அ + இ = ஏ | अ + इ = ए அ + உ = ஒ | अ + उ = ओ
ஆ + இ = ஐ | आ + इ = ऐ ஆ+ உ = ஔ | आ + उ = औ
சார்பெழுத்து : அயோக³வாஹம்தமிழில் சார்பெழுத்துக்கள் என்றழைக்கப்படுபவை, சமஸ்கிருதத்தில்
சமஸ்கிருதத்தில் நான்கு அயோகவாஹங்கள் உள்ளன :
ஜிஹ்வாமூலீயமும் உபத்⁴மானீயமும்
ஆக, அயோக³வாஹங்களுக்கு மூன்று குறியீடுகள் :
அம்ʼ அ: அ(:) | अं अः अ(:)
அனுஸ்வாரம்அனுஸ்வராம், மகர மெய்யின் சப்தத்தை நெருங்கிய சப்தத்தை கொண்டது. ஆயினும், மகரத்தைப் போல், உதடுகள் சேராத மூக்கொலி. [ மகரம் உதடுகள் சேர்ந்து எழும் மூக்கொலி (Bilabial Nasal) ]
விஸர்க³ம்விஸர்க³த்தின் பயன், ஸ்வரத்தின் மாத்திரையில் பாதியாக வரக்கூடிய ஹகாரத்தை இணைப்பது.
அதாவது, அதே போல,
அர்த⁴ விஸர்க³ம்ஏற்கனவே, கூறினாற்போல இது இரு சப்தங்களை குறிக்கிறது. ஒன்று ஜிஹ்வாமூலீயம், இன்னொன்று உபத்⁴மானீயம்.
விஸர்கமானது,
அதே போல, விஸர்கம்
உபத்மானீயம் ஜிஹ்வாமூலீயம் ஆகிய இரண்டுமே அர்த விஸர்க குறியீட்டால் சுட்டப்படுவதால், அர்த விஸர்கம் வரும் இடத்தை பொருத்தே அது ஜிஹ்வாமூலீயமா அல்லது உபத்மானீயமா என்று முடிவு செய்ய இயலும்.
ஆக, இத்துடன் ஸ்வரங்கள் மற்றும் அயோக³வாஹங்கள் குறித்த விபரங்கள் முடிந்தன. அடுத்து வ்யஞ்ஜனங்கள் (மெய்யெழுத்துக்கள்) குறித்தும் இன்னும் இரண்டு குறியீடுகள் குறித்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
(இவை எல்லாம் ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுதியது தான் என்றாலும், ஒரு முழுமைக்காக தமிழில் மீண்டும் எழுதுகின்றேன்)
குறிப்பு:
சமஸ்கிருதத்தில், அகார-விஸர்கத்துடன் வரும் சொற்கள், அவை நபர்கள் குறித்தால் ஒழிய, தமிழில் மகர மெய்யுடன் சேர்த்தே எழுதப்படுகிறது.
அதே சமயத்தில், சமஸ்கிருதத்தில் ‘ம’கர மெய்யுடன் முடியும் சொற்களும் அதே போல மகர மெய்யுடனே தமிழில் வழங்கப்படுகிறது. இது ஒன்றன்பாலை குறிக்கிறது. உதாரணம்,
ஆகவே, இரண்டையும் தமிழில் மகர மெய்யுடனே இந்த பதிவில் எழுதினாலும், மூல சமஸ்கிருத வடிவை கிரந்தாக்ஷரத்தை கண்டு தெரிந்து கொள்க. |




Comments
RSS feed for comments to this post.