| கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம் - 2 - மெய்யெழுத்துக்கள் |
|
|
|
|| ஜயது ஸம்ʼஸ்க்ருʼதம் - வத³து ஸம்ʼஸ்க்ருʼதம் || जयतु संस्कृतम् - वदतु संस्कृतम् ||
![]() யோகே³ஸ்²வரம்ʼ த³ஸ²ப³லம்ʼ லோகஜ்ஞம்ʼ லோகபூஜிதம் | லோகாசார்யம்ʼ லோகமூர்திம்ʼ லோகனாத²ம்ʼ நமாம்யஹம் || || ப்³ரஹ்மாவிரசித பு³த்³த⁴ப⁴ட்டாரகஸ்தோத்ரம் ||
योगेश्वरं दशबलं लोकज्ञं लोकपूजितम् ।
लोकाचार्यं लोकमूर्तिं लोकनाथं नमाम्यहम् ॥ ॥ ब्रह्माविरचित बुद्धभट्टारकस्तोत्रम् ॥ யோகேஸ்வரனை தசப³லனை லோகஜ்ஞனை லோகபூஜிதனை | லோகாசார்யனை லோகமூர்த்தியை லோகநாதனை வணங்குகிறேன் நான் | || ப்ரஹ்மா இயற்றிய புத்தபட்டாரக ஸ்தோத்ரம் || சென்ற பதிவில், சமஸ்கிருதத்தில் உள்ள உயிரெழுத்துக்களையும் சார்பெழுத்துக்களையும் கண்டோம். இந்த பதிவில் மெய்யெழுத்துக்களை குறித்து காண்போம். அதோடு கூட இன்னும் இரண்டு குறியீடுகள் குறித்தும் பார்க்கலாம்.
மெய்யெழுத்து : வ்யஞ்ஜனம்மெய்யெழுத்து என்பதை சமஸ்கிருதத்தில்
கீழ்க்கண்டவை சமஸ்கிருதத்தில் வழங்கப்படும் வ்யஞ்ஜனங்கள் ஆகும்.
க க² க³ க⁴ ங । क ख ग घ ङ - தொண்டையில் தோன்றும் ஒலிகள் - ஆங்கிலத்தில் Velar Stops
ச ச² ஜ ஜ² ஞ । च छ ज झ ञ - அண்ணத்தில் தோன்றும் ஒலிகள் - ஆங். Palatal Stops
ட ட² ட³ ட⁴ ண । ट ठ ड ढ ण - (நா வளைந்து) மேல் அண்ணத்தில் தோன்றும் ஒலிகள் - ஆங். Retroflex Stops
த த² த³ த⁴ ந | त थ द ध न - பல்லில் தோன்றும் ஒலிகள் - ஆங். Dental Stops
ப ப² ப³ ப⁴ ம । प फ ब भ म - உதட்டில் தோன்றும் ஒலிகள் - ஆங். Bilabial Stops
ய ர ல வ ள । य र ल व ळ - இடையினம் - ஆங். Semi-Vowels
ஸ²(ஶ) ஷ ஸ ஹ । श ष स ह - உரசலால் தோன்றும் ஒலிகள் - ஆங். Fricatives
சமஸ்கிருதத்தில், தமிழைப்போல் அல்லாமல், ஹகாரம் கலந்த ஒலிகளுக்கும், g, b போன்ற அதிர்வொலிகளுக்கும் (Voiced Consonants) தனியே வரிவடிவங்கள் உண்டு.
ஹகாரம் கலந்த ஒலிகளை
(ஒரு சிறு குறிப்பு. அதே போல, அதிர்வொலிகளுக்கு
க முதல் ம வரையிலான, 25 எழுத்துக்களும் வர்க்க எழுத்துக்கள் என்றழைப்படுகின்றன. இவ்வர்க எழுத்துக்கள்
தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பிரிப்போம் அல்லவா ? சமஸ்கிருதத்திலும் அவ்வாறே எழுத்துக்கள் பிரிக்கப்படுகின்றன.
கடினம் : வல்லினம்
क ख च छ ट ठ त थ प फ । க க² ச ச² ட ட² த த² ப ப²
அகோ⁴ஷ ஸ்பர்ஸ²ங்கள் பத்தும் இதில் அடங்கும்.
இது தமிழின் வல்லினத்துக்கு ஒப்பானது : க <> ச <> ட <> த <> ப <> |ற|. தமிழில் மஹாப்ராண அக்ஷரங்களை இல்லை, றகரம் தமிழுக்குரிய எழுத்து.
அடுத்து,
ம்ருʼது³
ग घ ज झ ड ढ ब भ । க³ க⁴ ஜ ஜ² ட³ ட⁴ ப³ ப⁴
கோ⁴ஷ ஸ்பர்ஸ²ங்கள் பத்தும் இதில் அடங்கும்.
இதற்கு தமிழில் ஒப்புமை இல்லை.
அனுநாசிகம் : மெல்லினம்
ङ ञ ण न म । ங ஞ ண ந ம
இது தமிழின் மெல்லினத்துக்கு ஒப்பானது : ங ஞ ண ந ம |ன|. ன தமிழுக்குரியது.
அந்த:ஸ்த²ம் : இடையினம்
இதுவே தமிழின் இடையினத்துக்கு ஒப்பானது : ய ர ல வ |ழ| ள. ழகரம் தமிழுக்குரியது.
மெய்யொலிக்கும் உயிரொலிக்கும் இடைப்பட்ட ஒலியுடைவை ஆதலால், இவை இடையினம் என்று அழைக்கப்பட்டன. சமஸ்கிருதத்தில் அந்தஸ்தம் என்று சொல்லுக்கும், இடைப்பட்டவை என்றே பொருள். ஆங்கிலத்தில் இதே காரணத்திற்குதான் இவற்றை “Semi-Vowels" என்பர்.
இதை தவிர்த்து ஏற்கனவே கண்டது போல, ஸ² முதல் ஹ வரை உள்ளவை ஊஷ்மன் என்று அழைக்கப்படுகின்றன.
உயிர்மெய்யெழுத்துக்கள்தமிழைப்போலவே, உயிரும் மெய்யும் இணைந்தே உயிர்மெய் வரிசைகள் உண்டாவதாக கருதப்படுகின்றன.
க் + அ = க | क् + अ = क க் + ஆ = கா । क् + आ = का
என்றவாறு.
எனவே, ப்ரத்யேகமாக சொல்ல ஏதும் இல்லை. ஆகவே, ககாரத்த்தின் ஸ்வர வரிசையினை மட்டும் உதாரணத்திற்கு காண்போம்.
க் க கா கி கீ கு கூ க்ருʼ க்ரூʼ க்லுʼ க்லூʼ கே கை கோ கௌ
क् क का कि की कु कू कृ कॄ कॢ कॣ के कै को कौ
இன்னும் இரண்டு குறியீடுகளை காண்போம் எனக்கூறி இருந்தேன் அல்லவா ? இனி அவை குறித்து.
சந்த்³ரபி³ந்து³
அம் ̐ अँ
இது அதற்குரிய உயிரொலியை மூக்கொலியாக்குகிறது (Nasalization of the corresponding Vowel sound). நவீன கால ஹிந்தியின் சந்திரபிந்து உச்சரிப்பைக்கொண்டது. அவ(ன்), இவ(ன்) என்று தமிழ் பேச்சுவழக்கில் உள்ள மூக்கொலியும் இதுவே. அது மட்டும் அல்லாது, மெய்யெழுத்துக்களின் நாஸிகமயத்தையும் (Nasal release of Consonants) குறிக்கும்.
அவக்³ரஹம்
ऽ ' (அ)
இது தொக்கிய அகரத்தை சுட்டும் குறியீடு. சந்தியின் (புணர்ச்சியின்) போது, அகரம் கெட்டால், மறைந்த அகரத்தை இது சுட்டும்
நம: + அமிதாபா⁴ய = நமோ(அ)மிதாபா⁴ய नमः + अमिताभाय = नमोऽमिताभाय
ஆகாரம் கெடும் நிலையில், இரண்டு அவக்³ரஹங்கள் இட்டு அது உணர்த்தப்படும்.
ததா³ + ஆத்மாநம் = ததா³(அ)(அ)த்மாநாம் तदा + आत्मानम् = तदाऽऽत्मानाम्
அவக்³ரஹத்தை உச்சரிக்ககூடாது. சந்தியினால்(புணர்ச்சியினால்) மறைந்த அகரத்தை எழுத்தில் குறிப்பது மட்டுமே அதன் வேலை.
அவக்³ரஹத்தை கண்டிப்பான இட வேண்டும் என்று ஏதும் கட்டாயம் இல்லை. ஒரு வார்த்தை எப்படி பிரித்து பொருள் காண்பது என்பதை உணர்த்தவே அவக்ரஹம்.
உதாரணமாக,
ஆனாலும், வெறும் எழுத்துக்குறியீடு என்பதால், சில பல சமயங்களில் அவக்³ரஹம் எழுத்தில் காண்பிக்கப்படுவது இல்லை. ஆகவே, சமஸ்கிருத சந்தி பிரிப்பது என்பது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டியது ஆகும். எக்குத்தப்பாக பிரிக்க நேரிட்டால், எதிர்மறையான பொருள் வந்து நிற்கும்.
சமஸ்கிருத எழுத்துக்கள் குறித்த முழுமையான அறிமுகம் முற்றிற்று :).
அடுத்த பதிவில் இருந்து முறையாக சமஸ்கிருதத்தை கற்க ஆரம்பிக்கலாம். அதுவரை, விராமம் :-) |





Comments
அவக்ரஹ: உச்சரிக்கப்படக் கூடாது, எழுத்து வடிவத்தில் மட்டுமே காட்டப்படவேண்டு ம் என்று தாங்கள் கூறியது எந்தவரை சரி எனத்தெரியவில்லை . அவக்ரஹ்: புணர்ச்சியைக் காட்டுவதற்கு பயன்படும் அதேநேரம், மாத்திரை அலகையும் கூட்டுகிறது. உதாரணமாக, न मो अ मि ता भा य
எனபது I S I I S S I= 10 மாத்திரைகள் உச்சரிக்கப்படும ். न मो मि ता भा य என்பது, I S I S S I= 9 மாத்திரைகள் தாம் வரும். இது மாத்ரிக சந்தங்களில் (मात्रिक छन्दाः) மாத்திரை அளபுகளை வேறுபடுத்திவிடு ம். புணர்ச்சி அத்தகைய குழப்பங்களை எற்படுத்தாமல் இருக்கவே அவக்ரஹ: இடப்பெறுகிறது. न मो अ स्तु (I S I S)= नमोSस्तु (I S 'I' S). எனவே அவக்ரஹத்திற்கு( S) ஒரு மாத்திரையும்(I) , மஹா அவக்ரஹத்திற்கு( SS) இரண்டு மாத்திரையும் வழங்குதல் முறை. இது தமிழில் மாத்திரை அளபுதனை நீட்ட உயிர் எழுத்தை எழுதுவதற்கு இணையானது. உதா- ஆடூஉ = aadooo என்பது சரி. aadoo-u என்பது தவறு.
அவக்ரஹம் உச்சரிப்படாது. அது ஒரு சௌகர்யார்த்தமான குறியீடு தான். அதனால் தான், சில இடங்களில் அவக்ரஹம் இடப்படாது விடுவது உண்டு. அதில் தவறில்லை.
மீண்டும் வேத சமஸ்கிருத அறிஞர்களை கேட்டதில் இதை உறுதி செய்தனர்.
நன்றி
RSS feed for comments to this post.