Virtual Vinodh

திருக்குறள் - பௌத்த உரை Print E-mail

திருவள்ளுவர் வைதிகரா சமணரா என்று விவாதங்கள் நடைபெறும் நிலையில், திருக்குறளுக்கு ஏன் ஒரு பௌத்த உரை எழுதக்கூடாது என்று தோன்றியது :). முதற்குறளுக்கான பௌத்த உரை, இதோ !


buddha2அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மையானது ஆதிபகவன் உலகிற்கு முதன்மையானவன். 
 
எழுத்துக்களில் அகரத்தை மட்டும் முதன்மையாக உணர்த்தியது எதனால் ?
 
குருகுலத்தில் கற்கும் போது  அகரத்தை ஆசார்யர் உச்சரித்தவுடன், போதிசத்துவரின் அதிஷ்டானத்தினால் ”ததா அநித்ய ஸர்வஸம்ஸ்கார சப்தோ நிஸ்சரதி ஸ்ம” என்றவாறு அந்த அகரமானது சர்வஸம்ஸ்காரங்களும் ”அநித்யமானது” என உணர்த்தியதாம். “அகாரோ முக ஸர்வதர்மாணாம்” என்றவாறு அகரமே சகலதர்மங்களுக்கு முகமானது என்று அஷ்டஸாஹஸ்ரிக ப்ரஜ்ஞாபாரமிதா சூத்திரத்தில் பகவனே அகரத்தின் முதன்மைமை உபதேசிக்கிறார். 
 
 
கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம் - 2 - மெய்யெழுத்துக்கள் Print E-mail

Samskrita-slogan-grantha

||  ஜயது ஸம்ʼஸ்க்ருʼதம் - வத³து ஸம்ʼஸ்க்ருʼதம் || जयतु संस्कृतम् - वदतु संस्कृतम् ||
 

teaching-buddha-statue-60cms-2-562-p
yogeshvara_buddha_grantha
buddha_bhattaraka_stotra_corrected
 

யோகே³ஸ்²வரம்ʼ த³ஸ²ப³லம்ʼ லோகஜ்ஞம்ʼ லோகபூஜிதம் |  

லோகாசார்யம்ʼ லோகமூர்திம்ʼ லோகனாத²ம்ʼ நமாம்யஹம் ||

|| ப்³ரஹ்மாவிரசித பு³த்³த⁴ப⁴ட்டாரகஸ்தோத்ரம் ||

 

योगेश्वरं दशबलं लोकज्ञं लोकपूजितम् ।  

लोकाचार्यं लोकमूर्तिं लोकनाथं नमाम्यहम् ॥

॥ ब्रह्माविरचित बुद्धभट्टारकस्तोत्रम् ॥


யோகேஸ்வரனை தசப³லனை லோகஜ்ஞனை லோகபூஜிதனை |

லோகாசார்யனை லோகமூர்த்தியை லோகநாதனை வணங்குகிறேன் நான் |

|| ப்ரஹ்மா இயற்றிய புத்தபட்டாரக ஸ்தோத்ரம் ||


 
சென்ற பதிவில், சமஸ்கிருதத்தில் உள்ள உயிரெழுத்துக்களையும் சார்பெழுத்துக்களையும் கண்டோம். இந்த பதிவில் மெய்யெழுத்துக்களை குறித்து காண்போம். அதோடு கூட இன்னும் இரண்டு குறியீடுகள் குறித்தும் பார்க்கலாம்.
 

மெய்யெழுத்து : வ்யஞ்ஜனம் 

மெய்யெழுத்து என்பதை சமஸ்கிருதத்தில் Vyanjna_grantha வ்யஞ்ஜநம் व्यञ्जनम् வ்யஞ்ஜனம் என்று குறிப்பிடுவர். பன்மையில் vyanjanani_grantha வ்யஞ்ஜநாநி व्यञ्जनानि வ்யஞ்ஜனானி - மெய்யெழுத்துக்கள் என்று வரும்.
 
கீழ்க்கண்டவை சமஸ்கிருதத்தில் வழங்கப்படும் வ்யஞ்ஜனங்கள் ஆகும்.
 
 
கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம் - 1 - உயிரெழுத்துக்களும் சார்பெழுத்துக்களும் Print E-mail

Samskrita-slogan-grantha

||  ஜயது ஸம்ʼஸ்க்ருʼதம் - வத³து ஸம்ʼஸ்க்ருʼதம் || जयतु संस्कृतम् - वदतु संस्कृतम् ||
 

buddha_true_fractal_croppedAdi-Buddha-Stotra-Grantha-shloka
  
  
 
 
ப்³ரஹ்மணேஸத்த்வரூபாய ரஜோரூபாய விஷ்ணவே 
தமோரூபமஹேஸா²ய ஜ்ஞாநரூபாய தே நம​:
ब्रह्मणेसत्त्वरूपाय रजोरूपाय विष्णवे 
तमोरूपमहेशाय ज्ञानरूपाय ते नमः
||  Adi-Buddha-Stotra-Grantha_copy ||
|| ஆதி³பு³த்³த⁴ த்³வாத³ஸ²க ஸ்தோத்ரம் | आदिबुद्ध स्तोत्रम्  ||
 
 
நேரடி பொருள் :
 
ப்ரஹ்மாவுக்குஸத்த்வரூபனுக்கு ரஜோரூபனுக்கு விஷ்ணுவுக்கு
தமோரூபமஹேசனுக்கு ஞானரூபனுக்கு அவருக்கு வணக்கம்
 
விளக்கமான பொருள்:
 
ஸத்த்வரூபத்தில் ப்ரஹ்மாவாகவும் ரஜோரூபத்தில் விஷ்ணுவாகவும், தமோரூபத்தில் மஹேசனாகவும் ஞானரூபனாகவும் இருக்கும் ஆதிபுத்தருக்கு வணக்கம்
  

 

இந்தப் பதிவில் அக்ஷரங்கள் குறித்து காண்போம். கிரந்தாக்ஷர பதிவுகளில் தேவைக்கும் அதிகமாகவே, சமஸ்கிருத அக்ஷரங்களை குறித்த விபரங்களை எழுதிவிட்டபடியால்,  இந்தப்பதிவும் (அடுத்து வரப்போகும் பதிவும்) பெரும்பாலும் ஏற்கனவே ஆங்கிலத்தில் கிரந்தாக்ஷரம் குறித்து எழுதியதின் மொழிபெயர்ப்பாகவே இருக்கும். இவற்றை ஏற்கனவே படித்திருந்தால், பொறுத்துக்கொள்ளவும் :-)

 

நெடுங்கணக்கு என்பதை சமஸ்கிருதத்தில் varnamala_granthaவர்ணமாலா वर्णमाला என்று அழைப்பர். எழுத்து என்பது aksharam-grantha அக்ஷரம் अक्षरम् என்றழைக்கப்பெறும். பன்மையில் aksharani_grantha அக்ஷராணி अक्षराणि என்று வரும்.

 
ஓம் நமோ புத்தாய - 1 Print E-mail

buddha-sky-edited
vinayaka_quote_grantha 
|| யோ த⁴ர்மம்ʼ பஸ்²யதி ஸ பு³த்³த⁴ம்ʼ பஸ்²யதி ||
|| எவர் தர்மத்தை காண்கிறாரோ அவர் புத்தரை காண்கிறார் ||

-- சாலிஸ்தம்ப சூத்திரம்


 

Tamil_OMபொதுவாகவே, பௌத்தம் என்று நவீன காலங்களில் சுட்டப்படுவது, பெரும்பாலும் நூதன-பௌத்த (Neo-Buddhism) கருத்துக்கள் தாம். நூதன பௌத்தம் என்பது எவ்வித பாரம்பரியமுமற்ற எங்குமே கடைப்பிடிக்கப்படாத ஒரு போலி உருவாக்கம். விக்டோரிய தூய்மைவாத கருத்துகளும், மேற்கத்திய (பொய்ப்)பகுத்தறிவு (Rationalism) கருத்துக்களும், கொஞ்சம் தொட்டுக்கொள்ள தேவையான அளவு தேரவாத பௌத்த கருத்துக்களும் கலந்து உருவாக்கப்பட்ட செயற்கையான கலவை. இந்த மேற்கத்திய செயற்கை கருத்தாக்கம் தான் இந்தியாவிலேயே மறுஅறிமுகம் செய்யப்பட்டு, அதுவே பௌத்தத்தின் வெகுஜன முகமாக இன்று பரிணமித்திருக்கிறது.
 
இந்தியாவின் பௌத்த மத புனர்நிர்மாணம் இந்திய பௌத்த பாரம்பரியங்களை அடிப்படையாக கொள்ளாது, அதை விடுத்து, மேற்கத்திய பௌத்த கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்திய பெருங்கண்டத்தை சுற்றியிருந்த தேசங்களில் உள்ளோரெல்லாம் பௌத்தம் கற்றுக்கொண்ட இடங்களாக காஞ்சியும், தக்ஷசீலமும், விக்ரமசீலமும், நாளந்தாவும் இருந்த நிலையில், பௌத்த கருத்துக்களை மேற்கத்திய தேசங்களில் இருந்து இறக்குமதி செய்வது அபத்தமான விஷயம். 
 
பலர் எண்ணுவது போல, பௌத்தம் ஒரு ஒற்றைப்படையான கருத்தாக்கம் இல்லை. தன்னுள் பலவிதமான பிரிவுகளையும் பாரம்பரியங்களையும் கொண்டது. புத்த பகவான் மஹாபரிநிர்வாணம் அடைந்த பிறகு சில நூறுவருடங்களிலேயே, பல சங்கபேதங்கள் நிகழ்ந்து - பௌத்தத்தில் பல பிரிவுகள் உண்டாகின. 
 
 
மஹா மங்கள சூத்திரம் Print E-mail
 
மஹா மங்கள சூத்திரம், மிகவும் பிரசித்தி பெற்ற தேரவாத பௌத்த சூத்திரம் ஆகும். 
 
இந்த சூத்திரம் “பரித்தம்” என்ற உபபிரிவில் வந்து சேரும். பரித்தங்கள் என்பவை மங்களத்தன்மைக்காகவும், ரக்ஷைக்காகவும் உச்சாடனம் செய்யப்படுபவை....

ஏவம்ʼ மே ஸுதம்ʼ: ஏகம்ʼ ஸமயம்ʼ ப⁴க³வா ஸாவத்தி²யம்ʼ விஹரதி ஜேதவனே அனாத²பிண்டி³கஸ்ஸ ஆராமே. அத² கோ² அஞ்ஞதரா தே³வதா அபி⁴க்கந்தாய ரத்தியா அபி⁴க்கந்தவண்ணா கேவலகப்பம்ʼ ஜேதவனம்ʼ ஓபா⁴ஸேத்வா யேன ப⁴க³வா தேனுபஸங்கமி, உபஸங்கமித்வா ப⁴க³வந்தம்ʼ அபி⁴வாதே³த்வா ஏகமந்தம்ʼ அட்டா²ஸி, ஏகமந்தம்ʼ டி²தா கோ² ஸா தே³வதா ப⁴க³வந்தம்ʼ கா³தா²ய அஜ்ஜ²பா⁴ஸி. 
 
ப³ஹு தே³வா மனுஸ்ஸா ச மங்க³லானி அசிந்தயும்ʼ,
ஆகங்க²மானா ஸோத்தா²னம்ʼ ப்³ரூஹி மங்க³ல முத்தமம்ʼ. 
 
அஸேவனா ச பா³லானம்ʼ பண்டி³தானஞ்ச ஸேவனா, 
பூஜா ச பூஜனீயானம்ʼ ஏதம்ʼ மங்க³லமுத்தமம்ʼ. 
 
பதிரூபதே³ஸவாஸோ ச புப்³பே³ ச கதபுஞ்ஞதா, 
அத்தஸம்மாபணிதி⁴ ச ஏதம்ʼ மங்க³லமுத்தமம்ʼ. 
 
யார் பிராமணர் ? வாசெட்ட சூத்திரம் Print E-mail
[திரிபிடகம் --> சூத்திர பிடகம் ---> மஜ்ஜிம நிகாயம் --> பிராமண வர்க்கம் --> வாசெட்ட சூத்திரம்]
 
(ஸ்ரீலங்கா புத்த சாசன அமைச்சக வெளியீட்டில் இருந்து...)
 
Dharma_Chakra_by_elvenmuseநான் பின்வருமாறு கேள்வியுற்றேன். ஒரு சமயம் புத்த பகவான் “இச்சாநங்கல” என்னும் கிராமத்தில் “இச்சாநங்கல” எனப் பெயரிய சிறுகாட்டில் எழுந்தருளி இருந்தார்கள். அக்காலத்தில் பலவாறு புகழ் பெற்ற செல்வம் படைத்த அந்தணர்கள் இச்சாநங்கல கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். அந்த அந்தணர்களின் பெயர்கள் வருமாறு: சங்கீ பிராமணர், தாருக்க பிராமணர், பொக்கரஸாதி பிராமணர், ஜாணுஸ்ஸோணி பிராமணர், தோதெய்ய பிராமணர் முதலியோரும் செல்வம் படைத்த புகழ்மிகு இன்னும் பல பிராமணர்கள்.

அக்காலத்தில் பாதங்களுக்கு சுகம் தரும் நோக்கில் கால் நடையாகச் சென்ற வாசெட்டர், பாரத்வாஜர் ஆகிய இரு இளைஞர்களுக்கிடையில் பின்வரும் விவாதம் நிகழ்ந்தது.

”அன்புடையீர், ஒருவர் எங்ஙனம் பிராமணர் என்னும் நிலையினை அடைவார் ? “ பாரத்வாஜ இளைஞர் பின்வருமாறு கூறினார். “அன்புடையீர், ஏதோவொரு காரணத்தினால் ஒருவர் தாய் பக்கத்தினாலும் நற்பிறப்புடையவராக விளங்குகிறாரோ ஏழாவது பிதாமகர் காலம் வரை தூய தாய் வயிற்றுடையவராக விளங்குகிறாரோ பிறப்பினைக் குறித்து துரத்தப்படாதவராகவோ நிந்திக்கப்படாதவராக விளங்குகிறாரோ அத்தகையவர் பிராமணர் எனப்படுவார்.” என்றார். அதற்கு வாசெட்ட இளைஞர், “அன்புடையீர், ஒருவர் சீலமுடையவராக அல்லது ஒழுக்கமுடையவராக விளங்குகிறாரோ அவர் பிராமணர் என்ப்படுவார்” என்றார். பாரத்வாஜ இளைஞர் வாசெட்ட இளைஞரை இணங்கவைக்க முடியவில்லை.
 
<< Start < Prev 1 2 3 4 Next > End >>

Page 1 of 4