ஸ்ரீ விருஷப தீர்த்தங்கர ஆதிநாத துதி

jina-parshva
எப்பிறப்புக்கு ஒங்கும் இகழாது உன் சேவடிக்கே
அப்பிறப்புக்கு அப்பிறப்பாய் ஆளாய் வழிபடுவேன்
தற்பிறப்பு நீ எனக்கு தந்தருளும் கீர்த்தியே
எப்பிறப்பும் இல்லாத எந்தை பெருமானே
நீதி புகழ் ஆர்ப்பாகைத்தனில் வாழும் நிமலனே
நிறைந்த நன்னெறி வாசனே
நினைத்தவர்க்கு அருள் புரியும் வேத பிராகசனே
நிர்மல குணசீலனே
வேத முடிவாகிய விண்ணவர் சகாயனே
வேதாந்த ஜின ராஜனே
விளங்கும் வைபோகனே நாதாந்தசித்தனே
வினைதீர்க்கும் பரிசுத்தனே
ஆதியே எளியோர்க்கும் அன்பு பிரகாசனே
அமிர்த சஞ்சீவி முதலே
அண்டர் புகழ் தொண்டர் மகிழ்
எண்திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே
திருவளர் புரியும் தேவனே உன் பாதம்
தேடி நான் தொழவும் அறியேன்
சீருடன் உம்மை பூஜிக்கும் அன்பரை
சிந்தையில் நினைக்க அறியேன்
மறுமலர் கொண்டுதான் அர்ச்சனைகள் செய்து உனை
வணங்கி நான் பணிய அறியேன்
வந்தனஞ்செய்யா புல்லரோடு இணங்கி
நன்னெறி தவறி நின்றேன்
தருநிழல் போல் உம்மை அடுத்து நானும்
சரணமும் என்றடியில் வீழ்ந்தேன்
தயவு வைத்து என்னை ஆட்கொண்டிடவே
சமயமிது நல்ல தருணமிது
அருள்-அது கொடுத்து இரட்சியும் ஐயா
ஆர்ப்பாகை அமர்ந்த நாயகனே
அண்டர் புகழ் தொண்டர் மகிழ்
எண் திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே !

jina-parshva

எப்பிறப்புக்கு ஒங்கும் இகழாது உன் சேவடிக்கே

அப்பிறப்புக்கு அப்பிறப்பாய் ஆளாய் வழிபடுவேன்

தற்பிறப்பு நீ எனக்கு தந்தருளும் கீர்த்தியே

எப்பிறப்பும் இல்லாத எந்தை பெருமானே !

 

நீதி புகழ் ஆர்ப்பாகைத்தனில் வாழும் நிமலனே

நிறைந்த நன்னெறி வாசனே

 

நினைத்தவர்க்கு அருள் புரியும் வேத பிராகசனே

நிர்மல குணசீலனே

 

வேத முடிவாகிய விண்ணவர் சகாயனே

வேதாந்த ஜின ராஜனே

 

விளங்கும் வைபோகனே நாதாந்தசித்தனே

வினைதீர்க்கும் பரிசுத்தனே

 

ஆதியே எளியோர்க்கும் அன்பு பிரகாசனே

அமிர்த சஞ்சீவி முதலே

 

அண்டர் புகழ் தொண்டர் மகிழ்

எண்திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே

 

திருவளர் புரியும் தேவனே உன் பாதம் தேடி நான் தொழவும் அறியேன்

சீருடன் உம்மை பூஜிக்கும் அன்பரைசிந்தையில் நினைக்க அறியேன்

 

மறுமலர் கொண்டுதான் அர்ச்சனைகள் செய்து உனை

வணங்கி நான் பணிய அறியேன்

 

வந்தனஞ்செய்யா புல்லரோடு இணங்கி

நன்னெறி தவறி நின்றேன்

 

தருநிழல் போல் உம்மை அடுத்து நானும்

சரணமும் என்றடியில் வீழ்ந்தேன்

 

தயவு வைத்து என்னை ஆட்கொண்டிடவே

சமயமிது நல்ல தருணமிது

 

அருள் அது கொடுத்து இரட்சியும் ஐயா

ஆர்ப்பாகை அமர்ந்த நாயகனே

 

அண்டர் புகழ் தொண்டர் மகிழ்

 எண் திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *