குண்டலகேசி

தமிழ் காப்பியமான குண்டலகேசி, திரிபிடகத்தின் குத்தக நிகாயத்தில் தேரி காதையில் (காதை < காதா ) உள்ள பிக்ஷுனியான தேரி குண்டலகேசியின் கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. (பௌத்த பெரியோர்களை தேரன், தேரி என்று (பாளியில்) அழைப்பது மரபு. தேர < ஸ்தாவிர மூத்தர்வர்கள் என்று பொருள்படும் படி வரும். தேரவாதம் < ஸ்தாவிரவாதம் – மூத்தவர்களின் வாதம்)

 
குண்டலகேசி பாளிமொழித்தழுவலாகத்தான் இயற்றப்பட்டது.

 

கள்வனை விரும்பி மணக்க, அவனோ பொருளுக்கு ஆசைப்பட்டு அவனை கொல்ல வர, இவள் அவனை கடைசி முறையாக வணங்க விரும்புவதாக கூறி மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விட்டு கொன்று விடுவாள்.வாழ்க்கையை வெறுத்த அவள் கடைசியில் நிக்ரந்த (ஜைன) சமயத்தில் சேர்ந்து நிக்ரந்தர்களின் சங்கத்தில் துறவறம் ஏற்றாள். அங்கு நிக்ரந்தர்கள் அவளுக்கு தங்களுடைய சமய நெறிகளை போதித்தனர். சிறிது காலத்திலேயே சமண சமய வாதங்களில் தேர்ச்சி பெற்றவளாய் விளங்கினாள்

 

இருப்பினும் சில காலத்துக்கு பிறகு அவளுக்கு ஜைன சமய தத்துவங்களால் திருப்தி அடையவில்லை. ஆதலால் நிக்ரந்தர்களை விட்டு விலகி தானே பரிவ்ராஜிகையாய் அலைந்து திரிந்து தன்னை வாதத்தால் வெல்பவர்களை குருவாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தாள்.

Continue reading

shubhamastu_grantha

கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம்

shubhamastu_grantha

।। ஸு²ப⁴மஸ்து | शुभमस्तु ।।


buddha_sermonbuddha_invocation_grantha 

||  நமஸ்தஸ்மை ப⁴க³வதே(அ)ர்ஹதே ஸம்யக்ஸம்பு³த்³தா⁴ய ||

॥  नमस्तस्मै भगवतेऽर्हते सम्यक्सम्बुद्धाय ॥

 

buddha_charita_invocation_grantha

ஸ்²ரியம்ʼ பரார்த்⁴யாம்ʼ வித³த⁴த்³விதா⁴த்ருʼஜித் தமோ நிரஸ்யன்னபி⁴பூ⁴தபா⁴னுப்⁴ருʼத்| 

நுத³ன்னிதா³க⁴ம்ʼ ஜிதசாருசந்த்³ரமா​: ஸ வந்த்³யதே (அ)ர்ஹன்னிஹ யஸ்ய நோபமா||


 

சமஸ்கிருதம் நம் பாரம்பரியத்தின் மொழி. அகண்ட பாரத்தையும் கடந்து தென் கிழக்காசியா வரை தன் தாக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டது.

 

ஒரு திபெத்திய பௌத்த ஆச்சாரியர் இவ்வாறு கூறுகிறார்:

 

திபெத்திய பாரம்பரியத்தில், பண்டைக்கால தர்ம ராஜாக்கள் அனைத்து தர்ம நூல்களின் தலைப்புகளும் சமஸ்கிருதத்திலும் திபெத்திய மொழியிலும் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். ஏனெனில், நித்தமும் நூல்களின் தலைப்பில் சமஸ்கிருதத்தை காண்பதன் மூலம் உந்தப்பட்டு என்றாவது ஒரு நாள் அம்மொழியை கற்பார்கள் என்று.

Continue reading