ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படை என்ன ?

கிறிஸ்தவம், இஸ்லாம், யூத மதங்கள் ஆகியவையே ஆபிரஹாமிய மதங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆபிரஹாமை தங்களின் பூர்வீகமாக ஏற்பதினால் இந்தப்பெயர். இவற்றின் கருத்துக்களை ஓரளவுக்கு நாம் பல்வேறுவகைகளில் நாம் கடந்து வந்திருப்போம். ஆனாலும், அவற்றின் நம்பிக்கைகளின் அடிநாதமாக இருப்பது என்னவென்று நாம் தெளிவாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போது தான் இயேசுவும் வாசுவும் ஒன்று என்பதான பிதற்றலான வரிகளை நம்மில் பலர் கூறுவது எவ்வளவு தவறென்று தெரியும்.
 
பொதுவாக ஆபிரஹாமிய மதங்கள் அனைத்தும் ஓரிறைக்கொள்கையை உடையவை என்பதை அறிவோம். தங்களுடைய தெய்வத்தை தவிர்த்து உலகில் வேறு தெய்வம் கிடையாது என்ற கொள்கையை கொண்டவை. அப்படியான எந்த தெய்வத்தை அவை வணங்குகின்றன ? “கர்த்தர்” “ஆண்டவர்” என்றெல்லாம் பைபிளில் கூறப்படும் மூல தெய்வம் எது ? எப்போதுமே ஒரு தெய்வம் மட்டுமே வணங்கப்பட்டதா ? பிற தெய்வங்களின் நிலை என்ன ? முதலிய கேள்விகளுக்கான விடையை காண முயல்வோம்.
 
இதற்கு, 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தூர மத்திய கிழக்காசிய பகுதிக்கு நாம் பயணிக்க வேண்டும். இக்காலக்கட்டத்தில், அப்பகுதியில் இஸ்ரேலியர்கள் உட்பட போன்ற பல்வேறு இனங்கள் வாழ்ந்து வந்தன. அவை பல்வேறு தெய்வங்களை வணங்கி வந்தன. ஏல் என்ற படைப்புக்கடவுள் கனானியர்களால் வணங்கப்பட்ட தெய்வம் முக்கியமானதொன்று. இஸ்ரேலியர்கள் யாஹ்வே (பைபிளில் யெகோவா என்று வரும். யாஹ்வே என்பதே மூல பதம்) என்ற போர் தெய்வத்தை வணங்கி வந்தனர். காலப்போக்கில் யாஹ்வே தெய்வம் ஏலின் அனைத்து அம்சங்களையும் கிரகித்துக்கொண்டது. பைபிளின் பழைய ஏற்பாடு (யூதர்களின் தனாக்) ஏல் மற்றும் யாஹ்வே வழிபாட்டர்களின் வெவ்வேறு நூல்களை ஒன்றினைத்தே உருவாக்கப்பட்டது.
 

Continue reading

buddha-sky-edited

ஓம் நமோ புத்தாய – 1


buddha-sky-edited

vinayaka_quote_grantha 
|| யோ த⁴ர்மம்ʼ பஸ்²யதி ஸ பு³த்³த⁴ம்ʼ பஸ்²யதி ||
|| எவர் தர்மத்தை காண்கிறாரோ அவர் புத்தரை காண்கிறார் ||

— சாலிஸ்தம்ப சூத்திரம்


 

Tamil_OMபொதுவாகவே, பௌத்தம் என்று நவீன காலங்களில் சுட்டப்படுவது, பெரும்பாலும் நூதன-பௌத்த (Neo-Buddhism) கருத்துக்கள் தாம். நூதன பௌத்தம் என்பது எவ்வித பாரம்பரியமுமற்ற எங்குமே கடைப்பிடிக்கப்படாத ஒரு போலி உருவாக்கம். விக்டோரிய தூய்மைவாத கருத்துகளும், மேற்கத்திய (பொய்ப்)பகுத்தறிவு (Rationalism) கருத்துக்களும், கொஞ்சம் தொட்டுக்கொள்ள தேவையான அளவு தேரவாத பௌத்த கருத்துக்களும் கலந்து உருவாக்கப்பட்ட செயற்கையான கலவை. இந்த மேற்கத்திய செயற்கை கருத்தாக்கம் தான் இந்தியாவிலேயே மறுஅறிமுகம் செய்யப்பட்டு, அதுவே பௌத்தத்தின் வெகுஜன முகமாக இன்று பரிணமித்திருக்கிறது.
 
இந்தியாவின் பௌத்த மத புனர்நிர்மாணம் இந்திய பௌத்த பாரம்பரியங்களை அடிப்படையாக கொள்ளாது, அதை விடுத்து, மேற்கத்திய பௌத்த கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்திய பெருங்கண்டத்தை சுற்றியிருந்த தேசங்களில் உள்ளோரெல்லாம் பௌத்தம் கற்றுக்கொண்ட இடங்களாக காஞ்சியும், தக்ஷசீலமும், விக்ரமசீலமும், நாளந்தாவும் இருந்த நிலையில், பௌத்த கருத்துக்களை மேற்கத்திய தேசங்களில் இருந்து இறக்குமதி செய்வது அபத்தமான விஷயம். 
 
பலர் எண்ணுவது போல, பௌத்தம் ஒரு ஒற்றைப்படையான கருத்தாக்கம் இல்லை. தன்னுள் பலவிதமான பிரிவுகளையும் பாரம்பரியங்களையும் கொண்டது. புத்த பகவான் மஹாபரிநிர்வாணம் அடைந்த பிறகு சில நூறுவருடங்களிலேயே, பல சங்கபேதங்கள் நிகழ்ந்து – பௌத்தத்தில் பல பிரிவுகள் உண்டாகின. 
 

Continue reading

மஹா மங்கள சூத்திரம்

 

மஹா மங்கள சூத்திரம், மிகவும் பிரசித்தி பெற்ற தேரவாத பௌத்த சூத்திரம் ஆகும். 
 
இந்த சூத்திரம் “பரித்தம்” என்ற உபபிரிவில் வந்து சேரும். பரித்தங்கள் என்பவை மங்களத்தன்மைக்காகவும், ரக்ஷைக்காகவும் உச்சாடனம் செய்யப்படுபவை….

ஏவம்ʼ மே ஸுதம்ʼ: ஏகம்ʼ ஸமயம்ʼ ப⁴க³வா ஸாவத்தி²யம்ʼ விஹரதி ஜேதவனே அனாத²பிண்டி³கஸ்ஸ ஆராமே. அத² கோ² அஞ்ஞதரா தே³வதா அபி⁴க்கந்தாய ரத்தியா அபி⁴க்கந்தவண்ணா கேவலகப்பம்ʼ ஜேதவனம்ʼ ஓபா⁴ஸேத்வா யேன ப⁴க³வா தேனுபஸங்கமி, உபஸங்கமித்வா ப⁴க³வந்தம்ʼ அபி⁴வாதே³த்வா ஏகமந்தம்ʼ அட்டா²ஸி, ஏகமந்தம்ʼ டி²தா கோ² ஸா தே³வதா ப⁴க³வந்தம்ʼ கா³தா²ய அஜ்ஜ²பா⁴ஸி. 
 
ப³ஹு தே³வா மனுஸ்ஸா ச மங்க³லானி அசிந்தயும்ʼ,
ஆகங்க²மானா ஸோத்தா²னம்ʼ ப்³ரூஹி மங்க³ல முத்தமம்ʼ. 
 
அஸேவனா ச பா³லானம்ʼ பண்டி³தானஞ்ச ஸேவனா, 
பூஜா ச பூஜனீயானம்ʼ ஏதம்ʼ மங்க³லமுத்தமம்ʼ. 
 
பதிரூபதே³ஸவாஸோ ச புப்³பே³ ச கதபுஞ்ஞதா, 
அத்தஸம்மாபணிதி⁴ ச ஏதம்ʼ மங்க³லமுத்தமம்ʼ. 

Continue reading

Dharma_Chakra_by_elvenmuse

யார் பிராமணர் ? வாசெட்ட சூத்திரம்

[திரிபிடகம் –> சூத்திர பிடகம் —> மஜ்ஜிம நிகாயம் –> பிராமண வர்க்கம் –> வாசெட்ட சூத்திரம்]
 
(ஸ்ரீலங்கா புத்த சாசன அமைச்சக வெளியீட்டில் இருந்து…)
 
Dharma_Chakra_by_elvenmuseநான் பின்வருமாறு கேள்வியுற்றேன். ஒரு சமயம் புத்த பகவான் “இச்சாநங்கல” என்னும் கிராமத்தில் “இச்சாநங்கல” எனப் பெயரிய சிறுகாட்டில் எழுந்தருளி இருந்தார்கள். அக்காலத்தில் பலவாறு புகழ் பெற்ற செல்வம் படைத்த அந்தணர்கள் இச்சாநங்கல கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். அந்த அந்தணர்களின் பெயர்கள் வருமாறு: சங்கீ பிராமணர், தாருக்க பிராமணர், பொக்கரஸாதி பிராமணர், ஜாணுஸ்ஸோணி பிராமணர், தோதெய்ய பிராமணர் முதலியோரும் செல்வம் படைத்த புகழ்மிகு இன்னும் பல பிராமணர்கள்.

அக்காலத்தில் பாதங்களுக்கு சுகம் தரும் நோக்கில் கால் நடையாகச் சென்ற வாசெட்டர், பாரத்வாஜர் ஆகிய இரு இளைஞர்களுக்கிடையில் பின்வரும் விவாதம் நிகழ்ந்தது.

”அன்புடையீர், ஒருவர் எங்ஙனம் பிராமணர் என்னும் நிலையினை அடைவார் ? “ பாரத்வாஜ இளைஞர் பின்வருமாறு கூறினார். “அன்புடையீர், ஏதோவொரு காரணத்தினால் ஒருவர் தாய் பக்கத்தினாலும் நற்பிறப்புடையவராக விளங்குகிறாரோ ஏழாவது பிதாமகர் காலம் வரை தூய தாய் வயிற்றுடையவராக விளங்குகிறாரோ பிறப்பினைக் குறித்து துரத்தப்படாதவராகவோ நிந்திக்கப்படாதவராக விளங்குகிறாரோ அத்தகையவர் பிராமணர் எனப்படுவார்.” என்றார். அதற்கு வாசெட்ட இளைஞர், “அன்புடையீர், ஒருவர் சீலமுடையவராக அல்லது ஒழுக்கமுடையவராக விளங்குகிறாரோ அவர் பிராமணர் என்ப்படுவார்” என்றார். பாரத்வாஜ இளைஞர் வாசெட்ட இளைஞரை இணங்கவைக்க முடியவில்லை.

Continue reading

sarva_vid_vairocana_cropped

திரைலோக்கியவிஜயரும் சிவனும்

சர்வ ததாகத தத்துவ சங்கிரஹம் என்னும் வஜ்ரயான (பௌத்த தாந்த்ரீக) நூலில் வஜ்ரபாணி சிவனை அடக்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. காரணடவியூஹ சூத்திரத்தில் தானே அவலோகிதேஸ்வரரிடம் புத்த வியாகரணம் கேட்பதாக விபரிக்கப்பட்ட அதே வேளையில், இங்கு சிவன் வஜ்ரபாணியினால் அடக்கப்பட்டு, பஸ்மேஸ்வர புத்தராக புத்தத்துவம் எய்த இருப்பதை உணர்வதாக சர்வ ததாகத தத்துவ சங்கிரஹம் குறிப்பிடுகிறது. இந்த நிகழ்வின் சுருக்கம் பின்வருமாறு.
 

அனைத்து தேவர்களும் சுமேரு வருகை

 
sarva_vid_vairocana_croppedஒரு சமயம் சுமேரு மலையின் உச்சியில் அனைத்து புத்தர்களும் ஒரு மண்டலத்தை உருவாக்குவதற்காக வஜ்ரபாணியை தன்னுடைய குலத்தை சேர்ந்த அத்தனை பரிவார தேவர்களை அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர். இருப்பினும் வஜ்ரபாணி இதற்கு மறுப்புத்தெரிவிக்கிறார். உலகில் தர்மத்தை ஏற்றுக்கொள்ளாத மகேஸ்வரன் போன்ற தேவர்கள் இருப்பதாகவும் அனைத்து புத்தர்களாலேயே இவர்களை அடக்காத போது, தான் எவ்வாறு அவர்களை இங்கே அழைத்துவருவது என கேள்வி எழுப்புகிறார். 
 
உடனே மகாவைரோசன புத்தர் சமாதி நிலை அடைகிறார். அதன் பலனாக வஜ்ரபாணி திரைலோக்யவிஜய (மூவுலகத்தையும் வெற்றிக்கொள்பவர்) உருவத்தை எய்துகிறார். மேலும் மகேஸ்வரனையும் அவருடைய பரிவார தேவர்களையும் மேரு மலையின் மேல் பிரசன்னமாகுமாறு செய்கிறார். உடனே வஜ்ரபாணி அவர்களை நோக்கி தர்மத்தை ஏற்றுக்கொண்டு புத்தரிடமும் தர்மத்திடமும் சங்கத்திடமும் சரண் புகுமாறு ஆணையிடுகிறார். அவ்வாறு சரணமடைந்து சர்வஞானத்தையும் அடையுமாறு கூறுகிறார்.
 

Continue reading

avalokitesvara_chenrezig

சிவனின் புத்த வியாகரணம்

எவ்வாறு வைதீகம், புத்தரை நாராயணனுடைய அவதாரங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டதோ. அதேபோல, பௌத்தமும் சிவனை வருங்காலத்தில் புத்தத்துவம் அடைபவர்களில் ஒருவாராக கருதுகிறது.
 
பௌத்த சூத்திரமான காரண்டவியூஹ சூத்திரத்தி்ல் சிவன் தனக்கு புத்த வியாகரணத்தை கேட்பது விரிவாக தெரிவிக்கிப்பட்டுள்ளது. 

 

காரண்டவியூஹ சூத்திரத்தின் ஆரம்பத்தில் கௌதம புத்தர் கூடியுள்ள அனைவருக்கும் தர்ம உபதேனை செய்வதை விவரிக்கும் பகுதியில் இந்திரனும் மற்றும் இந்திரலோகத்து தேவர்களும் மஹேஸ்வரன் மற்றும் நாராயணன் ஆகியோரின் தலைமையில் அனைவரும் புத்தரின் உபதேசனையை கேட்க வந்ததாக விவரிக்கிறது. 

 

avalokitesvara_chenrezigசாக்கியமுனியான கௌதம புத்தர் தர்மத்தை உபதேசிக்கும் வேளையில் அவலோகிதேஸ்வர போதிசத்துவரின் பெருமைகளையும் கௌதம புத்தர் விவரிக்கின்றார். [புத்த நிலையை அடையப்போகும் நிலையில் இருப்பவர்கள் போதிசத்துவர்கள். அவலோகிதேஸ்வர அனைத்து புத்தர்களுடைய கருணையின் உருவகமாக கருதப்படுபவர் – மஹாகாருணிகமூர்த்தி] அப்போது மஹேஸ்வரன் அவலோகிதேஸ்வரரின் நெற்றியில் இருந்தும் நாராயணன் அதே அவலோகிதேஸ்வரரின் நெஞ்சுப்பகுதியில் இருந்து பிறந்ததாக கூறுகிறார். மஹேஸ்வரன் அவலோகிதேஸ்வரரின் தேகத்தில் இருந்து தோன்றியவுடன் அவலோகிதேஸ்வர போதிசத்துவர் மஹேஸ்வரனை பார்த்து, “மஹேஸ்வரா, தர்மம் மறையும் காலக்கட்டத்தில் உன்னையே சிலர் ஆதிதேவன் என்றும், உலகத்தை சிருஷ்டித்தவன் என்றும் கூறுவர்கள். அப்போது மக்கள் அனைவரும் புத்த தர்மத்தையும் போதி நிலை அடைவதற்கான வழிமுறைகளையும் மறந்திருப்பர்” என அவலோகிதேஸ்வரர் கூறியதாகவும் கௌதம புத்தர் உபதேசிக்கின்றார்

buddha_hand_mudra

நம்பிக்கை…சிரத்தை

buddha_hand_mudraசீனதேசத்தில் ஒரு ஊரில் சில வர்த்தகர்கள் பாரததேசத்திற்கு பிரயாணப்பட்டுக்கொண்டிருந்தனர், அந்த ஊரில் வயதான மூதாட்டி ஒருவர், அந்த வர்த்தர்களிடம் “அப்பா ! புத்தருடைய ஜென்மபூமிக்கு செல்கின்றீர்கள். நீங்கள் எவ்வளவோ அதிர்ஷ்டசாலிகள் ! நான் ஒரு அபாக்கியவதி. அந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்லை. உங்களை மீண்டும் மீண்டும் பிரார்த்திக்கின்றேன். அந்த தேசத்தில் இருந்து திரும்பி வரும்போது மறந்து போகாமல், புத்தருடைய சரீரபாகம் ஒன்றை கொண்டுவரவேண்டும். என்னுடைய பூஜை அறையில் வைத்து பூஜித்துக்கொள்வேன்” என வேண்டுகோள் விடுத்தார்.
 
”இவள் ஒரு பைத்தியக்காரி. புத்தருடைய சரீரபாகங்கள் பாரததேசத்தின் சந்தையில் வாங்கக்கூடிய வஸ்து என நினைத்துகொண்டிருக்கிறாள்” என மனதில் எண்ணிக்கொண்டு,  “அப்படியே பாட்டி, தவறாமல் கொண்டுவருகிறோம்” என்றனர் அந்த வர்த்தகர்கள்.
 

Continue reading

jina-parshva

ஸ்ரீ விருஷப தீர்த்தங்கர ஆதிநாத துதி

எப்பிறப்புக்கு ஒங்கும் இகழாது உன் சேவடிக்கே
அப்பிறப்புக்கு அப்பிறப்பாய் ஆளாய் வழிபடுவேன்
தற்பிறப்பு நீ எனக்கு தந்தருளும் கீர்த்தியே
எப்பிறப்பும் இல்லாத எந்தை பெருமானே
நீதி புகழ் ஆர்ப்பாகைத்தனில் வாழும் நிமலனே
நிறைந்த நன்னெறி வாசனே
நினைத்தவர்க்கு அருள் புரியும் வேத பிராகசனே
நிர்மல குணசீலனே
வேத முடிவாகிய விண்ணவர் சகாயனே
வேதாந்த ஜின ராஜனே
விளங்கும் வைபோகனே நாதாந்தசித்தனே
வினைதீர்க்கும் பரிசுத்தனே
ஆதியே எளியோர்க்கும் அன்பு பிரகாசனே
அமிர்த சஞ்சீவி முதலே
அண்டர் புகழ் தொண்டர் மகிழ்
எண்திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே
திருவளர் புரியும் தேவனே உன் பாதம்
தேடி நான் தொழவும் அறியேன்
சீருடன் உம்மை பூஜிக்கும் அன்பரை
சிந்தையில் நினைக்க அறியேன்
மறுமலர் கொண்டுதான் அர்ச்சனைகள் செய்து உனை
வணங்கி நான் பணிய அறியேன்
வந்தனஞ்செய்யா புல்லரோடு இணங்கி
நன்னெறி தவறி நின்றேன்
தருநிழல் போல் உம்மை அடுத்து நானும்
சரணமும் என்றடியில் வீழ்ந்தேன்
தயவு வைத்து என்னை ஆட்கொண்டிடவே
சமயமிது நல்ல தருணமிது
அருள்-அது கொடுத்து இரட்சியும் ஐயா
ஆர்ப்பாகை அமர்ந்த நாயகனே
அண்டர் புகழ் தொண்டர் மகிழ்
எண் திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே !

jina-parshva

எப்பிறப்புக்கு ஒங்கும் இகழாது உன் சேவடிக்கே

அப்பிறப்புக்கு அப்பிறப்பாய் ஆளாய் வழிபடுவேன்

தற்பிறப்பு நீ எனக்கு தந்தருளும் கீர்த்தியே

எப்பிறப்பும் இல்லாத எந்தை பெருமானே !

 

நீதி புகழ் ஆர்ப்பாகைத்தனில் வாழும் நிமலனே

நிறைந்த நன்னெறி வாசனே

 

நினைத்தவர்க்கு அருள் புரியும் வேத பிராகசனே

நிர்மல குணசீலனே

 

வேத முடிவாகிய விண்ணவர் சகாயனே

வேதாந்த ஜின ராஜனே

 

விளங்கும் வைபோகனே நாதாந்தசித்தனே

வினைதீர்க்கும் பரிசுத்தனே

 

ஆதியே எளியோர்க்கும் அன்பு பிரகாசனே

அமிர்த சஞ்சீவி முதலே

 

அண்டர் புகழ் தொண்டர் மகிழ்

எண்திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே

 

திருவளர் புரியும் தேவனே உன் பாதம் தேடி நான் தொழவும் அறியேன்

சீருடன் உம்மை பூஜிக்கும் அன்பரைசிந்தையில் நினைக்க அறியேன்

 

மறுமலர் கொண்டுதான் அர்ச்சனைகள் செய்து உனை

வணங்கி நான் பணிய அறியேன்

 

வந்தனஞ்செய்யா புல்லரோடு இணங்கி

நன்னெறி தவறி நின்றேன்

 

தருநிழல் போல் உம்மை அடுத்து நானும்

சரணமும் என்றடியில் வீழ்ந்தேன்

 

தயவு வைத்து என்னை ஆட்கொண்டிடவே

சமயமிது நல்ல தருணமிது

 

அருள் அது கொடுத்து இரட்சியும் ஐயா

ஆர்ப்பாகை அமர்ந்த நாயகனே

 

அண்டர் புகழ் தொண்டர் மகிழ்

 எண் திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே !

ஏழ்கடல் சூழ் இராமர் புகழ்

இராமன் என்ற மகாபுருஷனின் பேரொளியும் இராமாயணம் என்ற மகாகாவியத்தின் கீர்த்தியும் இந்தியர்களை மட்டுமல்லாது அனைத்து தேசத்தவர்களையும் ஈர்க்கும் திறன் கொண்டவை என்று கூறினால் அது பெருமித உணர்வு மட்டுமல்ல, வரலாற்று உண்மையும் ஆகும். தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற பல கடல்கடந்த கிழக்காசிய தேசங்களில் இராமனும் இராமாயணமும் இன்றும் பெரும் பிரசித்தியுடன் திகழ்கின்றன. கடல் தாண்டிய இராமனின், இராமாயணத்தின் பெருமைகளைச் சற்றே பார்க்கலாம்.

இந்தியாவின் ஈடு இணையற்ற காவியமான இராமாயணம், உலக மக்களுக்குத் தேவையான அனைத்து நீதிநெறிகளையும் தன்னுள் கொண்டது. அனைத்து விதமான உணர்ச்சிகளையும் அடக்கியது. காவியத் தலைமாந்தரான இராமன், சீதை மட்டுன்று, ஒவ்வொரு கதாபாத்திரமும் மனித வாழ்வில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். இராமாயண காவியத்தின் அடிப்படைக் கருத்துருவான நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான யுத்தம் அன்பது உலகின் அனைத்து பண்டைக் கலாசாரங்களிலும் பேசப்பட்ட பொருள் தான். ஆனால், இராமாயணம் அதோடு கூட குடும்பப் பாசம், நட்பு, சகோதரத்துவம், நல்லாட்சி, அறநெறிகள் என்று பலதரப்பட்ட வாழ்வியல் தத்துவங்களையும் தன்னகத்தே கொண்டது. இப்படிப்பட்ட ஓர் உன்னத காவியம் அது சென்ற நாடுகளிலெல்லாம் பேரும் புகழும் பெற்று அந்தந்த நாடுகளின் சொந்தக் காவியமாக பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் வியப்பேதும் இல்லை.. 

கிழக்காசிய நாடுகளுடனான தமிழர்களின் வாணிகம் மற்றும் அரசாட்சி மூலமாக இந்து மதமும், கலாச்சரமும் கிழக்காசியாவில் அறிமுகமானதாகக் கருதப்படுகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் வரை கிழக்காசியா முழுவதும் இந்து, பௌத்த தர்ம நெறிகளே பின்பற்றப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத் தக்கது. இந்து மதம் அங்கு சென்றபோது, இராமாயணமும் கூடச்சென்றது. சென்ற இடமனைத்தும் இராமாயணத்தின் பெருமைகள் நாடாளும் அரசர்கள் முதல் அடித்தட்டு மக்கள் வரை அனைவரையும் கவர்ந்துவிட்டன. இராமரையும் இராமாயணத்தையும் தங்கள் சொத்தாகவே இன்றுவரை கிழக்காசிய மக்கள் கருதி வருகின்றனர்.

Continue reading