buddha2

திருக்குறள் – பௌத்த உரை

திருவள்ளுவர் வைதிகரா சமணரா என்று விவாதங்கள் நடைபெறும் நிலையில், திருக்குறளுக்கு ஏன் ஒரு பௌத்த உரை எழுதக்கூடாது என்று தோன்றியது :). முதற்குறளுக்கான பௌத்த உரை, இதோ !


buddha2அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மையானது ஆதிபகவன் உலகிற்கு முதன்மையானவன். 
 

எழுத்துக்களில் அகரத்தை மட்டும் முதன்மையாக உணர்த்தியது எதனால் ?
 
குருகுலத்தில் கற்கும் போது  அகரத்தை ஆசார்யர் உச்சரித்தவுடன், போதிசத்துவரின் அதிஷ்டானத்தினால் ”ததா அநித்ய ஸர்வஸம்ஸ்கார சப்தோ நிஸ்சரதி ஸ்ம” என்றவாறு அந்த அகரமானது சர்வஸம்ஸ்காரங்களும் ”அநித்யமானது” என உணர்த்தியதாம். “அகாரோ முக ஸர்வதர்மாணாம்” என்றவாறு அகரமே சகலதர்மங்களுக்கு முகமானது என்று அஷ்டஸாஹஸ்ரிக ப்ரஜ்ஞாபாரமிதா சூத்திரத்தில் பகவனே அகரத்தின் முதன்மைமை உபதேசிக்கிறார். 
 

Continue reading

mars

செவ்வாய் கிரகத்தில் ஆதி தமிழர்கள் !

இப்போதைய டிரெண்டின் படி, (இல்லாத) லெமூரியாவில் (அ) குமரிக்கண்டத்தில் தான் உலக முதல் மனிதர்கள் தோன்றினார்கள் என்றும், அங்கிருந்து தான் மனிதர்கள் மற்ற கண்டங்களுக்கு போயினர் என்றும்,  உலக முதன் மொழி தமிழ் தான் என்றும், அதில் இருந்து தான் மொழிகள் தோன்றின என்றெல்லாம் ஆராய்ந்து குழுமங்களில்/வலைப்பதிவில் இடுவது இப்போதைய ஃபேஷன், குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் fad. சுமேரியமும் கூட தமிழ்  தான் என்று பலர் கூறிவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தான் என்னவோ, இஸ்ரேலியர்கள் கூட தமிழர்கள் தான் ஒருவர் “ஆராய்ந்து” எழுதி இருந்தார். அதைத்தொடர்ந்து செவ்வாயில் தமிழர்கள் என்று என்னுடைய ஆராய்ச்சி கீழே:
  
செவ்வாய் கிரகத்தின் வாசிகள் கூட ஆதி தமிழர்கள் தான். இதைப்பலரும் அறியவில்லை. குமரிக்கண்ட தமிழர்கள் அந்த காலத்திலேயே செவ்வாய் கிரகம் சென்று கால்வாய் வெட்டி, வாழ்ந்துள்ளனர். ஆனால், இன்று பாருங்கள் செவ்வாய் கிரகத்தில் தமிழர்கள் யாருமே இன்று இல்லை. அவர்கள் வெட்டிய கால்வாய்கள் மட்டும் அவர்கள் இருந்ததற்கான ஆதாரமாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றே, லெமூரிய தமிழர்கள் செவ்வாய் சென்று கால்வெய் வெட்டும் அளவுக்கு பெறும் அறிவுச்செல்வத்தை கொண்டிருந்தனர் என்றால் மிகையாகாது. செவ்வாயின் கால்வாய்களையும் சங்க கால கால்வாய்கள் என்று கூட வேண்டாம், தமிழர்கள் இன்று கம்மாக்கரையில் வெட்டும் கால்வாய்களையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மைகள் பல தெரிய வரும்.

marsஇன்றைய மேற்கத்திய விஞ்ஞானம் அவை தானாக தோன்றியவை என்று கூறுகிறது. 19ஆம் நூற்றாண்டிலேயே அவை செவ்வாய் கிரக வாசிகள் (அவர்களும் தமிழர்கள் தான்) என்று எண்ணற்ற விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். அப்படி இருக்க, இன்று அவற்றை மறுப்பது எதனால் என்பது அனைவரும் யோசித்தால், அதற்கான விடை என்னவென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கு நிச்சயம் ஆர்ய பார்ப்பன காழ்ப்புணர்வே காரணம். 19ஆம் நூற்றாண்டின் லெமூரியாவை ஒப்புக்கொள்ளும்போது, 19ஆம் விஞ்ஞானிகள், செவ்வாய் கால்வாய்கள் மனிதர்கள் (இவர்கள் ஆதி செவ்வாய் தமிழர்கள் என்று தான் நாம் நிரூபித்து விட்டோமே !) வெட்டியதே எனக்கூறியதை இன்று நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
Continue reading

குண்டலகேசி

தமிழ் காப்பியமான குண்டலகேசி, திரிபிடகத்தின் குத்தக நிகாயத்தில் தேரி காதையில் (காதை < காதா ) உள்ள பிக்ஷுனியான தேரி குண்டலகேசியின் கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. (பௌத்த பெரியோர்களை தேரன், தேரி என்று (பாளியில்) அழைப்பது மரபு. தேர < ஸ்தாவிர மூத்தர்வர்கள் என்று பொருள்படும் படி வரும். தேரவாதம் < ஸ்தாவிரவாதம் – மூத்தவர்களின் வாதம்)

 
குண்டலகேசி பாளிமொழித்தழுவலாகத்தான் இயற்றப்பட்டது.

 

கள்வனை விரும்பி மணக்க, அவனோ பொருளுக்கு ஆசைப்பட்டு அவனை கொல்ல வர, இவள் அவனை கடைசி முறையாக வணங்க விரும்புவதாக கூறி மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விட்டு கொன்று விடுவாள்.வாழ்க்கையை வெறுத்த அவள் கடைசியில் நிக்ரந்த (ஜைன) சமயத்தில் சேர்ந்து நிக்ரந்தர்களின் சங்கத்தில் துறவறம் ஏற்றாள். அங்கு நிக்ரந்தர்கள் அவளுக்கு தங்களுடைய சமய நெறிகளை போதித்தனர். சிறிது காலத்திலேயே சமண சமய வாதங்களில் தேர்ச்சி பெற்றவளாய் விளங்கினாள்

 

இருப்பினும் சில காலத்துக்கு பிறகு அவளுக்கு ஜைன சமய தத்துவங்களால் திருப்தி அடையவில்லை. ஆதலால் நிக்ரந்தர்களை விட்டு விலகி தானே பரிவ்ராஜிகையாய் அலைந்து திரிந்து தன்னை வாதத்தால் வெல்பவர்களை குருவாக ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தாள்.

Continue reading