
பகவான் (ஆதிநாதர்) இவ்வாறு சொல்லி அவர்களை ஆசிர்வாதவசனங்களால் வாழ்த்தித் தமது ஹிருதயகமலத்தெழுந்தருளியிருந்த ஸ்ருததேவியினை ஸ்வர்ணபட்டகத்தின் மிசை பூஜாபுரஸ்ஸரம் அதிவசிப்பித்து, ஸ்ரீஹஸ்தமிரண்டினுலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.
அங்ஙனம் காட்டி அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண ஹஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், அகராதி ஹகாராந்தமாகிய ஸ்வரம் வியஞ்சனமென்னும் இரண்டு பேதத்தினை உடைத்தாகியதும், அயோகவாகங்கள் இரண்டாகவுடையதுமாகிய அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்
தமிழ்-பிராமி எழுத்துமுறை பழந்தமிழை முதன் முதலாக எழுத பயன்படுத்தபட்ட பண்டைய எழுத்துமுறை ஆகும். இது இந்திய அளவிலான பிராமி எழுத்துமுறையின் தமிழ்மொழிக்கான தழுவல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழி தமிழ்-பிராமி எழுத்துக்களிலேயே எழுதப்பட்டு வந்தது. பழந்தமிழுக்கான மிக முந்திய கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ்-பிராமி எழுத்துமுறையிலேயே உள்ளன. பொது சகாப்தம்.நான்காம் நூற்றாண்டு வரையிலும் தமிழ்-பிராமி வழக்கில் இருந்தது. பின்னர் பொது சகாப்தம் ஐந்தாம் நூற்றாண்டளவில், இது வட்டெழுத்தாக உருமாற்றம் பெற்றது.
பண்டைய தமிழ்-பிராமி எழுத்துமுறைக்கான முதன் முதல் யூனிகோடு எழுத்துருவான, “ஆதிநாதன் தமிழ் பிராமி” எழுத்துருவை வெளியிடுகிறோம்.
http://www.virtualvinodh.com/download/
இந்த எழுத்துரு “ஓப்பன் ஃபாண்ட் லைசன்ஸ்”இன் கீழ் வெளியடப்படுகிறது. இதன் மூலம் எவரும் இந்த எழுத்துரு இலவசாமாக பயன்படுத்தி, மாற்றி, பகிர்ந்துக்கொள்ள இயலும் (ஓப்பன் ஃபாண்ட் லைசன்ஸ்’இன் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு). எழுத்துருவுடன், இன்ஸ்க்ரிப்ட் முறையிலான தட்டச்சிற்கான என்.ஹெச்.எம் ரைட்டரின் எக்ஸ்.எம்.எல்’இன் கோப்பும் தரப்பட்டுள்ளது. அத்துடன் எழுத்துருவை பற்றிய கூடுதல் விபரங்களும் அதை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளும் அடங்கிய கையேடும் உள்ளது.