தமிழ் இணைய பரப்பில் அதிகம் பயன்படுத்தப்படுவது என்.ஹெச்.எம் ரைட்டர் தான். அதன் விசைப்பலகைகளை நமக்கு ஏற்றவாறு எப்படி மாற்றிக்கொள்வது எனப்பார்ப்போம்..
என்.ஹெச்.எம் ரைட்டர் தன்னுடைய விசைப்பலகைகளை எக்ஸ்,எம்.எல் ஃபைலாக வைத்துக்கொள்கிறது. ஆகவே, அவற்றை மாற்றி அமைப்பது மிகவும் சுலபமான காரியம்.
எக்ஸ்.எம்.எல் ஃபைல்’களை $/Program Files/NHM Writer/Data என்னும் ஃபோல்டரில் காணலாம்.
உதாரணத்துக்கு ஃபோனட்டிக் கீ-போர்ட் லே-அவுட்டை எடுத்துக்கொள்வோம்.
அதை, Right-Click செய்து ஓபன் – வித் நோட்பேடு என்பதை தேர்வு செய்யவும்.
அப்படி திறந்தால்.. கீழ்க்கண்டவாறு தகவல்களை காணலாம்..
<Table>
<Header>
<Language>Tamil</Language>
<Encoding>Unicode</Encoding>
<Keyboard>Phonetic-Extended</Keyboard>
<LCID>0449</LCID>
<Author>NHM</Author>
<Description>UNICODE is a 16-bit encoding designed by Unicode
Consortium</Description>
</Header>
<Data>
<Map>
<Display>0B85</Display>
<Character>0B85</Character>
<Keys>61</Keys>
</Map>
[….]
< > </ > என்னும் குறிகளுக்கும் வருவது XML Element என்று அழைக்கப்படும்.
<keyboard> என்னும் பகுதியை, விசைப்பலகையின் பெயர் மாற்றம் தேவையெனில்
மாற்றிக்கொள்ளலாம்.
அடுத்து..
<Map > […] </Map> என்னும் பகுதிகளே, நம் தட்டச்சுக்கு தொடர்புடையவை.
ஒவ்வொரு மேப் எலிமெண்ட்டும். ஒவ்வொரு கீ-ஸ்ட்ரோக்குடன் தொடர்புடயவை..
உதாரணமாக..
<Map>
<Display>0B85</Display>
<Character>0B85</Character>
<Keys>61</Keys>
</Map>
இந்த பகுதி ‘a’ என்று அடித்தால் ‘அ’ என்று வருவதற்கு பொறுப்பானது.
<Keys>61</Keys> இல் உள்ள 61 என்பது ‘a’ என்னும் விசையை சுட்டுகிறது.
விண்டோஸில் ஸ்டார்ட் மெனு -> ஆல் புரோகிராம்ஸ் -> ஆக்ஸசரீஸ் -> சிஸ்டம் டூல்ஸ் -> கேரக்டர் மேப்’ என்னும் அப்ளிகேஷனை இயக்கவும்.
அதில் ஒவ்வொரு ஆங்கில எழுத்துடன் தொடர்புடைய எண் காட்டப்படும். ‘a’ என்பதை க்ளிக் செய்தால், அதற்கு U+0061 என்ற கோடு கீழே வரும். இதே போல மற்ற விசைகளுக்கு தனித்தனி யூனிகோடு கோடுகள் வரும்.ஆக, 61 என்பது நாம் அடிக்கும் விசையை குறிக்கும்.
டிஸ்பிளே மற்றும் காரக்டர் ஆகியவை திரையில் வரக்கூடிய எழுத்துக்களை சுட்டுகிறது.
கேரக்டர் மேப்பில்’ லதாவோ அல்லது வேறேதோ தமிழ் ஃபாண்ட்டை தேர்ந்தெடுத்தால், தமிழ் பகுதிக்கு சென்றால் தமிழ் யூனிகோடு
கோடுபாய்ண்டுகள் காட்ட்ப்படும். அதில் ‘அ’ வை தேர்ந்தெடுக்கள் கீழே “U+0B85″
சுருங்க சொல்லின்,
<Map>
<Display>0B85</Display>
<Character>0B85</Character>
<Keys>61</Keys>
</Map>
61 (a) என்னும் விசையை அழுத்தினால் 0B85(அ) என்ற எழுத்து திரையில் தோன்றும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட விசை இருந்தால் என்ன செய்ய ? அவற்றிர்க்குரிய என்களை அடுத்து அடுத்து இட வேண்டும்.
<Map>
<Display>0B88</Display>
<Character>0B88</Character>
<Keys>6969</Keys>
</Map>
இதில் பாத்தால், 6969 இருமுறை வரும். அதாவது, 69’என்பது iஐ குறிக்கும்.
இருமுறை i அழுத்தினால் 0B88(ஈ) வரும். 🙂
<Map>
<Display>0BA40BCD</Display>
<Character>0BA40BCD</Character>
<Keys>7468</Keys>
</Map>
அதாவது, 74(t) 68(h) ஆகிய விசைக்கோர்வைகளை அழுத்தினால் 0BA4(த) மற்றும் 0BCD(் – புள்ளி) இணைந்து த்’என்னும் எழுத்து திரையில் வரும்.ஒவ்வொரு விசைக்கோர்வைக்கும் ஒரு <map> element இருக்க வேண்டும்.
கீ-மேன்.. புரோகிராமிங்கை போல் அல்லாமல் கொஞ்சம் வேலைவாங்கும் செயல் இது என்றாலும், கீ-மேன் காசு கொடுத்த வாங்க வேண்டும்.. இது இலவசம் என்பதால் கொஞ்சம் மெனக்கெடுவது தகும்.
அவ்வளவு தான்..
இதன் அடிப்படையிலேயே.. விசைப்பலகை வடிவமைப்பு உள்ளது.
இதை புரிந்து கொண்டால், தேவைக்கு ஏற்ப இப்போது விசைகளை மாற்றிக்கொள்ளவோ, அல்லது புதிய விசைகளை சேர்த்துக்கொள்ளவோ இயலும்.