
எவ்வாறு வைதீகம், புத்தரை நாராயணனுடைய அவதாரங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டதோ. அதேபோல, பௌத்தமும் சிவனை வருங்காலத்தில் புத்தத்துவம் அடைபவர்களில் ஒருவாராக கருதுகிறது.
பௌத்த சூத்திரமான காரண்டவியூஹ சூத்திரத்தி்ல் சிவன் தனக்கு புத்த வியாகரணத்தை கேட்பது விரிவாக தெரிவிக்கிப்பட்டுள்ளது.
காரண்டவியூஹ சூத்திரத்தின் ஆரம்பத்தில் கௌதம புத்தர் கூடியுள்ள அனைவருக்கும் தர்ம உபதேனை செய்வதை விவரிக்கும் பகுதியில் இந்திரனும் மற்றும் இந்திரலோகத்து தேவர்களும் மஹேஸ்வரன் மற்றும் நாராயணன் ஆகியோரின் தலைமையில் அனைவரும் புத்தரின் உபதேசனையை கேட்க வந்ததாக விவரிக்கிறது.

இவ்வாறு அவலோகிதேஸ்வரரின் பெருமைகளை இவ்வாறாக விவரிக்கும் நிலையில் அவலோகிதேஸ்வரரே தன்னுடைய உலகமான சுகாவதியில் இருந்து அங்கு வந்து தோன்றுகிறார். தோன்றிய பின்னர் கௌதம புத்தரின் காலில் விழுந்து வணங்குகிறார். வணங்கிய பிறகு, அவலோகிதேஸ்வரர் பஞ்சமஹா புத்தர்களில் ஒருவரான அமிதாப புத்தர் கொடுத்தனுப்பிய தாமரைப்பூக்களை கௌதம புத்தரிடம் சமர்ப்பிக்கின்றார். கௌதம புத்தருடைய நலன் குறித்தும் விசாரிக்கின்றார். கௌதம புத்தரும் அதை ஏற்றுக்கொண்டு அந்த தாமரைப்பூக்களை தன் வலது புறம் வைத்துக்கொள்கிறார்.

சிவனும் புத்தர் கூறியவாறு அவலோகிதேஸ்வரர் முன்பு தோன்றி, அவர் காலில் விழுந்து வணங்கி,
நமோ பத்மதராய
நமோ பத்மாசனாய
நமோ சுபபத்மஹஸ்தாய
நமோ பத்மஸ்ரீயே
என பலவாறாக போற்றுகிறார்.
அவலோகிதேஸ்வரர், “மஹேஸ்வரனே, உனக்கு வேண்டியது என்ன ?”, என கேட்கிறார். சிவனும் புத்தரிடம் கூறியதை அவலோகிதேஸ்வரரிடம் கூறுகிறார். அதற்கு அவலோகிதேஸ்வரர், “மஹேஸ்வரனே, நீ வருங்காலத்தில் விவ்ருதம் என்னும் உலகத்தில் பஸ்மேஸ்வர புத்தர் என்ற பெயருடன் புத்தநிலையை அடைந்து உயிர்களுக்கு தர்மத்தை உபதேசிப்பாய்” என கூறுகிறார். இதனை கேட்டு மஹேஸ்வரன் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்கிறார்.
இதன் பின், மஹேஸ்வரனின் துணைவி உமாதேவியும் அவலோகிதேஸ்வரர் முன்பு தோன்றி அதே போல காலில் விழுந்து வணங்கி,
நமோ பிராணம்ததாய
நமோ பிருத்விவரலோசனகராய
நமோ சுபபத்மஸ்ரீயே
நமோ பரிவிருத்தாய
நமோ நிர்வாணபூமிசம்பிரஸ்திதாய
நமோ தர்மதராய
என பலவாறாக துதித்து தனக்கு மஹேஸ்வரனை போல் தனக்கும் ஒரு வியாகரணம் அருளுமாறு வேண்டுகிறார். உடனே அவலோகிதேஸ்வரர், உமாதேவியை நோக்கி, “உமாதேவி, நீ வருங்காலத்தில் உமேஸ்வர புத்தர் என்ற பெயருடன் புத்தநிலை அடைவாய். உனது உலகம் இமாலாய பர்வததத்திற்கு கிழக்கே இருக்கும்” என கூறுகிறார். உமாதேவியும் இதை கேட்டு மிகுந்த உவப்படைகிறார்.
இதனை கண்டுகொண்டிருந்த புத்தர், அவையில் இருந்தோரை பார்த்து, “எவ்வாறு மஹேஸ்வரனும் உமாதேவியும் வருங்காலத்தில் புத்தநிலை அடைந்து புத்தர்களாவது தின்னமோ அதே போல அனைத்து உயிர்களும் தர்மத்தை பின்பற்றினால் புத்தநிலை அடைவது உறுதி” என கூறுகிறார்.