கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம்

shubhamastu_grantha

shubhamastu_grantha

।। ஸு²ப⁴மஸ்து | शुभमस्तु ।।


buddha_sermonbuddha_invocation_grantha 

||  நமஸ்தஸ்மை ப⁴க³வதே(அ)ர்ஹதே ஸம்யக்ஸம்பு³த்³தா⁴ய ||

॥  नमस्तस्मै भगवतेऽर्हते सम्यक्सम्बुद्धाय ॥

 

buddha_charita_invocation_grantha

ஸ்²ரியம்ʼ பரார்த்⁴யாம்ʼ வித³த⁴த்³விதா⁴த்ருʼஜித் தமோ நிரஸ்யன்னபி⁴பூ⁴தபா⁴னுப்⁴ருʼத்| 

நுத³ன்னிதா³க⁴ம்ʼ ஜிதசாருசந்த்³ரமா​: ஸ வந்த்³யதே (அ)ர்ஹன்னிஹ யஸ்ய நோபமா||


 

சமஸ்கிருதம் நம் பாரம்பரியத்தின் மொழி. அகண்ட பாரத்தையும் கடந்து தென் கிழக்காசியா வரை தன் தாக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டது.

 

ஒரு திபெத்திய பௌத்த ஆச்சாரியர் இவ்வாறு கூறுகிறார்:

 

திபெத்திய பாரம்பரியத்தில், பண்டைக்கால தர்ம ராஜாக்கள் அனைத்து தர்ம நூல்களின் தலைப்புகளும் சமஸ்கிருதத்திலும் திபெத்திய மொழியிலும் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். ஏனெனில், நித்தமும் நூல்களின் தலைப்பில் சமஸ்கிருதத்தை காண்பதன் மூலம் உந்தப்பட்டு என்றாவது ஒரு நாள் அம்மொழியை கற்பார்கள் என்று.

 

திபெத்திய மொழியில் இருக்கும் சம்ஸ்கிருத பௌத்த நூல்களிலும் தலைப்பு இரு மொழிகளும் இருக்கும். அதில் சமஸ்கிருதம் என்று கூறாமால், இந்திய மொழியில் (பாரதீய பாஷா) இன்ன தலைப்பு, திபெத்திய மொழியில் இன்ன தலைப்பு என்று தான் கூறியிருக்கிறார்கள்

 

உதாரணமாக,

 

tibetan_title_grantha

 

 

 

பா⁴ரதீயபா⁴ஷாயாம் – ஆர்ய த⁴ர்மதா⁴துக³ர்ப⁴ விவரணம்।

போ⁴டபா⁴ஷாயாம் – ப²க்³-பா-சோ²ஸ்-க்யி-யிங்-க்யி-ஞிங்-போஈ-நம-பர-டே³ல-பா। 

 

ஆக, இந்தியாவின் ஒட்டு மொத்த் அடையாளமாகத்தான் சமஸ்கிருதம் கருதப்பட்டு வந்தது. ஆனால், ஏனோ நம் தமிழ் நாட்டில் மட்டும் தான் சமஸ்கிருதத்தை அந்நியப்படுத்துவதில் அரசியல்வாதிகள் வென்றுவிட்டனர் 🙁

 

நாம் நாட்டின் மொழியான சம்ஸ்கிருதத்தை கற்பது மிக மிக அவ்சியம்; சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற வேண்டாம், குறைந்த பட்சம் அடிப்படை சம்ஸ்கிருதமாவது கற்பது அவசியம். சுக்லாம்பரதரம் என்பது – சுக்ல-அம்பர-தரம் – வெள்ளை ஆடை அணிந்தவன் என்று சின்ன சின்ன சுலோகங்களின் பொருள் தெரிவதில் இனம் புரியாத மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. நம் முன்னோர்களை சரியாக புரிந்து கொள்ள சமஸ்கிருத அறிவு நிச்சயம் வேண்டும்.

 

எங்கேயோ இருக்கும் ஒரு ஜப்பானிய புத்த பிக்ஷு, பாரம்பரியமாகக ”ஸித்³த⁴ம்” சம்ஸ்கிருத லிபியை கற்று சமஸ்கிருத மந்திரங்களை உச்சாடனம் செய்து, சமஸ்கிருத பீ⁴ஜாக்ஷரங்களை தியானிக்கும் போது – நம் நாட்டின் மொழியை நாம் கற்காமல் இருப்பது சரியில்லை. முற்காலங்களில், திபெத்தில் இருந்தும் சீன தேசத்தில் இருந்தும் வந்து சமஸ்கிருதத்தை கற்று, பிறகு தத்தமது மொழிகளில் நூல்களை மொழிப்பெயர்த்து சென்றனர்.

 

அங்கொன்று இங்கொன்றென்று பிய்த்து பிய்த்து கற்காமல், ஒழுங்காக கற்கவேண்டுமென்று முடிவெடுத்து சென்ற வாரம் தாம் “ஸம்ஸ்கிருத பாரதி”யின் “ப்ரவேச” நிலைக்கு பதிவு செய்தேன். 2012 ஜனவரி கடைசி வாரம் தேர்வு என்கிறபடியால், உருப்படியாக கற்க வேண்டுமென்று எண்ணியுள்ளேன்.

 

ஆக, வாரா வாரம் நான் கற்றதை பகிரும் வண்ணம், பதிவுகளை இடுகிறேன். ( இல்லையெனில், நான் படிக்க மாட்டேன் 🙂 )

 

கிரந்தாக்ஷர பதிவைபோல், நிச்சயம் வாரா வாரம் ஒரு பதிவு இருக்கும். தவறிருப்பின் நிச்சயம் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கிறேன்.

 

இந்த பதிவுகளுக்கு பின்வரும் நூல்கள் துணையாக இருக்கும்:

 

தமிழ்:

 

 • ஸம்ஸ்கிருத பாரதியின் – 10 – ப்ரவேச – பாடநூல்கள்
 • சம்ஸ்கிருத முதற் புத்தகம்
 • சம்ஸ்கிருத இரண்டாம் புத்தகம்
 • ஸம்ஸ்கிருத ப்ரதம பாடம்
 • ஸம்ஸ்கிருத – தமிழ் அகராதி

 

பள்ளி பாடநூல்கள்:

 

 • CBSE Sanskrit Textbooks of NCERT (Classes VI to XII)
 • Sanskrit Textbook – Open School
 • Class X Sanskrit Textbook – Karnataka

 

Sanskrit :

 

 • Samskrita Baladarsha
 • Samskrita Prathamadarsha
 • Samskrita Dviteeyadarsha
 • Samskrita Triteeyadarsha
 • Vyavaharikam Samskritam – Prathamam Pustakam
 • Vyavaharikam Samskritam – Dviteeyam Pustakam
 • Vyavaharikam Samskritam – Triteeyam Pustakam

 

Hindi :

 

 • Samskrita Siksha
 • Samskrita Svayam Sikshak Prabha

 

English :

 

 • IIT-M Sanskrit Lessons
 • Teach yourself Sanskrit, McGrawHill Publications
 • Learning Sanskrit in 30 Days
 • Indroduction to Sanskrit, Thomas Egnes
 • Samskrita Subodhini , Madhav Deshpande
 • First Lessons in sanskrit
 • Speak Sanskrit the Easy Way, Aurobindo Asharam
 • The Spiritual Seeker’s Essential Guide to Sanskrit

 

இன்னும் பல விடுபட்டுள்ளன 🙂

 

ஆக,  ஜனவரி மாதம் ப்ரவேச நிலை தேர்வு நான் எழுதி முடிக்கும் வரை, பதிவுகள் வந்த வண்னம் இருக்கும் 🙂

 

அடுத்த ஞாயிற்றுலிருந்து ஆரம்பிக்கலாம்….

3 thoughts on “கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம்

 1. Dear Sir,
  The grantha software is very useful to traditional as well as modern Sanskrit students.
  But the, i am unable to download “http://virtualvinodh.com/grantha-lipitva/203-grantha-17-fonts-softwares” while connect to the above, it says the page is not found.
  Pl help me to download the software.
  Thank you.
  with regards,
  KP Umapathy Acharya

 2. ஆசிரியர் ஐயா

  நான் தமிழ் மொழி மீது பற்றுள்ளவன் சமஸ்கிருத மொழி மீது அதை விட அதிக பற்று உருவாகி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *