



யோகே³ஸ்²வரம்ʼ த³ஸ²ப³லம்ʼ லோகஜ்ஞம்ʼ லோகபூஜிதம் |
லோகாசார்யம்ʼ லோகமூர்திம்ʼ லோகனாத²ம்ʼ நமாம்யஹம் ||
|| ப்³ரஹ்மாவிரசித பு³த்³த⁴ப⁴ட்டாரகஸ்தோத்ரம் ||
लोकाचार्यं लोकमूर्तिं लोकनाथं नमाम्यहम् ॥
॥ ब्रह्माविरचित बुद्धभट्टारकस्तोत्रम् ॥
யோகேஸ்வரனை தசப³லனை லோகஜ்ஞனை லோகபூஜிதனை |
லோகாசார்யனை லோகமூர்த்தியை லோகநாதனை வணங்குகிறேன் நான் |
|| ப்ரஹ்மா இயற்றிய புத்தபட்டாரக ஸ்தோத்ரம் ||
மெய்யெழுத்து : வ்யஞ்ஜனம்








அந்த:ஸ்த²: अन्तःस्थः அந்த:ஸ்த²ம் :
ய ர ல வ ள । य र ल व ळ – இடையினம் – ஆங். Semi-Vowels
ஊஷ்மந் ऊष्मन् ஊஷ்மன் :
ஸ²(ஶ) ஷ ஸ ஹ । श ष स ह – உரசலால் தோன்றும் ஒலிகள் – ஆங். Fricatives
சமஸ்கிருதத்தில், தமிழைப்போல் அல்லாமல், ஹகாரம் கலந்த ஒலிகளுக்கும், g, b போன்ற அதிர்வொலிகளுக்கும் (Voiced Consonants) தனியே வரிவடிவங்கள் உண்டு.
ஹகாரம் கலந்த ஒலிகளை மஹாப்ராணா: महाप्रणाः மஹா-ப்ராணங்கள் (Aspirated Consonants) என்று அழைப்பர். ஹகார ஒலிகள் இல்லாதவற்றை
அல்பப்ராணா: अल्पप्राणाः அல்ப-ப்ராணங்கள் (UnAspirated Consonants) என்றும் அழைப்பர்.
(ஒரு சிறு குறிப்பு. ப² फ ’வை நவீன வட இந்திய மொழிகளில் ‘f’இல் உள்ள ஒலியாக உச்சரிக்க முற்படுகின்றன. அது முற்றிலும் தவறாகும். மற்ற மஹாப்ராண எழுத்துக்களைப்போல, இதுவும் ஹ’காரம் கலந்த ப’காரமாகவே (ப்ஹ) உச்சரிக்கப்படவேண்டும்.)
அதே போல, அதிர்வொலிகளுக்கு கோ⁴ஷா: घोषाः கோ⁴ஷங்கள் (Voiced Consonants) என்று பெயர். அதிர்வற்ற ஒலிகளுக்கு
அகோ⁴ஷா: अघोषाः அகோ⁴ஷங்கள் (UnVoiced Consonants) என்றும் பெயர்.
க முதல் ம வரையிலான, 25 எழுத்துக்களும் வர்க்க எழுத்துக்கள் என்றழைப்படுகின்றன. இவ்வர்க எழுத்துக்கள் ஸ்பர்ஸா²: स्पर्शाः ஸ்பர்ஸ²ங்கள் (Stops) என்று அழைக்கப்படுகின்றன.
தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பிரிப்போம் அல்லவா ? சமஸ்கிருதத்திலும் அவ்வாறே எழுத்துக்கள் பிரிக்கப்படுகின்றன.
கடினம் : வல்லினம்
கடிந: कठिनः கடினம்
क ख च छ ट ठ त थ प फ । க க² ச ச² ட ட² த த² ப ப²
அகோ⁴ஷ ஸ்பர்ஸ²ங்கள் பத்தும் இதில் அடங்கும்.
இது தமிழின் வல்லினத்துக்கு ஒப்பானது : க <> ச <> ட <> த <> ப <> |ற|. தமிழில் மஹாப்ராண அக்ஷரங்களை இல்லை, றகரம் தமிழுக்குரிய எழுத்து.
அடுத்து,
ம்ருʼது³
ம்ருʼது³: मृदुः ம்ருʼது³
ग घ ज झ ड ढ ब भ । க³ க⁴ ஜ ஜ² ட³ ட⁴ ப³ ப⁴
கோ⁴ஷ ஸ்பர்ஸ²ங்கள் பத்தும் இதில் அடங்கும்.
இதற்கு தமிழில் ஒப்புமை இல்லை.
அனுநாசிகம் : மெல்லினம்
அநுநாஸிக: अनुनासिकः அனுநாசிகம்
ङ ञ ण न म । ங ஞ ண ந ம
இது தமிழின் மெல்லினத்துக்கு ஒப்பானது : ங ஞ ண ந ம |ன|. ன தமிழுக்குரியது.
அந்த:ஸ்த²ம் : இடையினம்
அந்த:ஸ்த²: अन्तःस्थः அந்த:ஸ்த²ம்
இதுவே தமிழின் இடையினத்துக்கு ஒப்பானது : ய ர ல வ |ழ| ள. ழகரம் தமிழுக்குரியது.
மெய்யொலிக்கும் உயிரொலிக்கும் இடைப்பட்ட ஒலியுடைவை ஆதலால், இவை இடையினம் என்று அழைக்கப்பட்டன. சமஸ்கிருதத்தில் அந்தஸ்தம் என்று சொல்லுக்கும், இடைப்பட்டவை என்றே பொருள். ஆங்கிலத்தில் இதே காரணத்திற்குதான் இவற்றை “Semi-Vowels” என்பர்.
இதை தவிர்த்து ஏற்கனவே கண்டது போல, ஸ² முதல் ஹ வரை உள்ளவை ஊஷ்மன் என்று அழைக்கப்படுகின்றன.
உயிர்மெய்யெழுத்துக்கள்
தமிழைப்போலவே, உயிரும் மெய்யும் இணைந்தே உயிர்மெய் வரிசைகள் உண்டாவதாக கருதப்படுகின்றன.
க் + அ = க | क् + अ = क
க் + ஆ = கா । क् + आ = का
என்றவாறு.
எனவே, ப்ரத்யேகமாக சொல்ல ஏதும் இல்லை. ஆகவே, ககாரத்த்தின் ஸ்வர வரிசையினை மட்டும் உதாரணத்திற்கு காண்போம்.
க் க கா கி கீ கு கூ
க்ருʼ க்ரூʼ க்லுʼ க்லூʼ
கே கை கோ கௌ
क् क का कि की कु कू
कृ कॄ कॢ कॣ
के कै को कौ
இன்னும் இரண்டு குறியீடுகளை காண்போம் எனக்கூறி இருந்தேன் அல்லவா ? இனி அவை குறித்து.
சந்த்³ரபி³ந்து³
சந்த்³ரபி³ந்து³ चन्द्रबिन्दुः
அம் ̐ अँ
இது அதற்குரிய உயிரொலியை மூக்கொலியாக்குகிறது (Nasalization of the corresponding Vowel sound). நவீன கால ஹிந்தியின் சந்திரபிந்து உச்சரிப்பைக்கொண்டது. அவ(ன்), இவ(ன்) என்று தமிழ் பேச்சுவழக்கில் உள்ள மூக்கொலியும் இதுவே. அது மட்டும் அல்லாது, மெய்யெழுத்துக்களின் நாஸிகமயத்தையும் (Nasal release of Consonants) குறிக்கும்.
அவக்³ரஹம்
அவக்³ரஹ: अवग्रहः
ऽ ‘ (அ)
இது தொக்கிய அகரத்தை சுட்டும் குறியீடு. சந்தியின் (புணர்ச்சியின்) போது, அகரம் கெட்டால், மறைந்த அகரத்தை இது சுட்டும்
நம: + அமிதாபா⁴ய = நமோ(அ)மிதாபா⁴ய
नमः + अमिताभाय = नमोऽमिताभाय

ததா³ + ஆத்மாநம் = ததா³(அ)(அ)த்மாநாம்
तदा + आत्मानम् = तदाऽऽत्मानाम्
அவக்³ரஹத்தை உச்சரிக்ககூடாது. சந்தியினால்(புணர்ச்சியினால்) மறைந்த அகரத்தை எழுத்தில் குறிப்பது மட்டுமே அதன் வேலை.
அவக்³ரஹத்தை கண்டிப்பான இட வேண்டும் என்று ஏதும் கட்டாயம் இல்லை. ஒரு வார்த்தை எப்படி பிரித்து பொருள் காண்பது என்பதை உணர்த்தவே அவக்ரஹம்.
உதாரணமாக, सोमपोऽमृतपः ஸோமபோ(அ)ம்ருʼதப: என்று ஒரு கூட்டுச்சொல்லை வைத்துக்கொள்வோம் இதில் உள்ள் அவக்³ரஹ குறியீடு, இந்த சொல்லை,
+
सोमपः + अमृतपः ஸோமப: + அம்ருʼதப: , அமிழ்தத்தை அருந்துபவன், என்று பிரித்து பொருள் காண வேண்டும் என்று உணர்த்துகிறது. அவ்வாறில்லாமல், அவக்³ரஹ குறியீடு இல்லாத நிலை, ஒருவர் அதை
+
सोमपः + मृतपः ஸோமப: + ம்ருʼதப: என்று எக்குத்தப்பாக பிரிக்க நேரலாம் ! இதற்கு, இறந்தததை அருந்துபவன் என்று அனர்த்தமான பொருள் வரும் !!
ஆனாலும், வெறும் எழுத்துக்குறியீடு என்பதால், சில பல சமயங்களில் அவக்³ரஹம் எழுத்தில் காண்பிக்கப்படுவது இல்லை. ஆகவே, சமஸ்கிருத சந்தி பிரிப்பது என்பது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டியது ஆகும். எக்குத்தப்பாக பிரிக்க நேரிட்டால், எதிர்மறையான பொருள் வந்து நிற்கும்.
சமஸ்கிருத எழுத்துக்கள் குறித்த முழுமையான அறிமுகம் முற்றிற்று :).
அடுத்த பதிவில் இருந்து முறையாக சமஸ்கிருதத்தை கற்க ஆரம்பிக்கலாம். அதுவரை, விராமம் 🙂