கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம் – 1 – உயிரெழுத்துக்களும் சார்பெழுத்துக்களும்

Samskrita-slogan-grantha

Samskrita-slogan-grantha

||  ஜயது ஸம்ʼஸ்க்ருʼதம் – வத³து ஸம்ʼஸ்க்ருʼதம் || जयतु संस्कृतम् – वदतु संस्कृतम् ||
 

buddha_true_fractal_croppedAdi-Buddha-Stotra-Grantha-shloka

  
  
 
 
ப்³ரஹ்மணேஸத்த்வரூபாய ரஜோரூபாய விஷ்ணவே 
தமோரூபமஹேஸா²ய ஜ்ஞாநரூபாய தே நம​:
ब्रह्मणेसत्त्वरूपाय रजोरूपाय विष्णवे 
तमोरूपमहेशाय ज्ञानरूपाय ते नमः
||  Adi-Buddha-Stotra-Grantha_copy ||
|| ஆதி³பு³த்³த⁴ த்³வாத³ஸ²க ஸ்தோத்ரம் | आदिबुद्ध स्तोत्रम्  ||
 
 
நேரடி பொருள் :
 
ப்ரஹ்மாவுக்குஸத்த்வரூபனுக்கு ரஜோரூபனுக்கு விஷ்ணுவுக்கு
தமோரூபமஹேசனுக்கு ஞானரூபனுக்கு அவருக்கு வணக்கம்
 
விளக்கமான பொருள்:
 
ஸத்த்வரூபத்தில் ப்ரஹ்மாவாகவும் ரஜோரூபத்தில் விஷ்ணுவாகவும், தமோரூபத்தில் மஹேசனாகவும் ஞானரூபனாகவும் இருக்கும் ஆதிபுத்தருக்கு வணக்கம்
  


 

இந்தப் பதிவில் அக்ஷரங்கள் குறித்து காண்போம். கிரந்தாக்ஷர பதிவுகளில் தேவைக்கும் அதிகமாகவே, சமஸ்கிருத அக்ஷரங்களை குறித்த விபரங்களை எழுதிவிட்டபடியால்,  இந்தப்பதிவும் (அடுத்து வரப்போகும் பதிவும்) பெரும்பாலும் ஏற்கனவே ஆங்கிலத்தில் கிரந்தாக்ஷரம் குறித்து எழுதியதின் மொழிபெயர்ப்பாகவே இருக்கும். இவற்றை ஏற்கனவே படித்திருந்தால், பொறுத்துக்கொள்ளவும் 🙂

 

நெடுங்கணக்கு என்பதை சமஸ்கிருதத்தில் varnamala_granthaவர்ணமாலா वर्णमाला என்று அழைப்பர். எழுத்து என்பது aksharam-grantha அக்ஷரம் अक्षरम् என்றழைக்கப்பெறும். பன்மையில் aksharani_grantha அக்ஷராணி अक्षराणि என்று வரும்.

 

உயிரெழுத்துக்கள் : ஸவரங்கள்

உயிரெழுத்தை சமஸ்கிருதத்தில் Svarah-granthaஸ்வர: स्वरः ஸ்வரம் என்றழைப்பர். பன்மையில் இவை svaraah-granthaஸ்வரா: स्वराः என்று கூறப்படும். சமஸ்கிருதத்தில் பதினான்கு ஸ்வரங்கள் உள்ளன. 

 

अ आ इ ई उ ऊ ऋ ॠ । அ ஆ இ ஈ உ ஊ ருʼ ரூʼ

ऌ ॡ ए ऐ ओ औ । லுʼ லூʼ ஏ ஐ ஓ ஔ

 

grantha_vowels

 

சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் உள்ள பொதுவான ஸ்வரங்கள் 10. அவையாவன, 

 

grantha-tamil-vowels-common

அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஔ | अ आ इ ई उ ऊ ए ऐ ओ औ

 

தமிழில் இல்லாத ஸ்வரங்கள் நான்கு –

 

sanskrit-unique-vowels

ரு ரூ லு லூ | ऋ ॠ ऌ ॡ

 

இவற்றை உச்சரிக்கும் முறை:

 

R_Grantha –  கி’ரு’ஷ்ணன் என்பதில் உள்ள ‘ரு’ போல உச்சரிக்க வேண்டும். அதில் உள்ள உகரம் – குற்றியலுகரத்தை ஒத்து இருக்க வேண்டும்.

RR_Grantha – மேற்கண்ட எழுத்தின் நெடில் வடிவம் 

lR_granthaR_Granthaகாரத்தை போல ஆனால், ல’கார சப்தத்துடன் உச்சரிக்க வேண்டும் 

lRR_Grantha – மேற்கண்ட எழுத்தின் நெடில்

 

உயிரெழுத்துக்களை ac_granthaஅச் अच् என்ற pratyahara_grantha_correct  ப்ரத்யாஹார: प्रत्याहारः ப்ரத்யாஹாரம் மூலமும் குறிப்பர். 

 

குறில் – நெடில் – அளபெடை : ஹ்ரஸ்வம் – தீ³ர்க⁴ம் – ப்லுதம்

சமஸ்கிருதத்தில் உயிரெழுத்துக்களை மாத்திரைகளை வைத்து மூன்றாக பிரிப்பர். அவை – 

 

  • hrasva_grantha ஹ்ரஸ்வ: ह्रस्वः ஹ்ரஸ்வம் – குறில் ஒரு மாத்திரை
  • dirgha_grantha தீ³ர்க⁴: दीर्घः தீர்க⁴ம் – நெடில் இரு மாத்திரைகள்
  • pluta_grantha ப்லுத: प्लुतः ப்லுதம் – உயிரளபெடை – மூன்றும் அதற்கு மேற்பட்ட மாத்திரைகளும்.

 

கீழ்க்கண்ட 5 அக்ஷரங்களும் ஹ்ரஸ்வங்கள் :

 

short_vowel_grantha

அ இ உ ருʼ லுʼ | अ इ उ ऋ ऌ 

 

மேற்கண்டவை தவிர்த்த 9 அக்ஷரங்களும் தீ³ர்க⁴ங்கள் :

  

long_vowel_grantha

ஆ ஈ ஊ ரூʼ லூʼ ஏ ஐ ஓ ஔ | आ ई ऊ ॠ ॡ ए ऐ ओ औ

 

லௌகிக சமஸ்கிருதத்தில் ஏகாரம் மற்றும் ஓகாரத்தின் ஹ்ரஸ்வ வடிவங்களான “எ” மற்றும் “ஒ” இல்லை. ஆனாலும் வைதிக சமஸ்கிருதத்தில் இந்த ஒலிகள் உண்டு. ஏகாரம் மற்றும் ஓகாரத்தின் மீது விசேஷ வைதிக குறிகள் இடுவதன் மூலம் இவ்வொலிகள் குறிப்பிடப்படுகின்றன.

 

ப்லுத அக்ஷரங்களை இன்னும் பார்க்கவில்லை அல்லவா ? பொதுவாக, தமிழைப்போலவே சமஸ்கிருதத்தில் ப்லுத வடிவங்களுக்கு தனி வரிவடிவம் கிடையாது. தமிழில் மாத்திரையை நீட்ட, நெட்டிழுத்துக்கு இனமான குறில் எழுத்தை சேர்ப்பர் – மரூஉ – என்பதைப்போல ; இங்கு ஊகாரத்தை நீட்ட, குறில் ‘உ’கரம் இடப்பட்டது. 

 

ஆனால், சமஸ்கிருதத்தில் மாத்திரை அளவின் “எண் வடிவம்”, நெடில் எழுத்தின் பக்கத்தில் இடப்படும்.

 

இணை எழுத்து : ஸந்த்⁴யக்ஷரம்

சமஸ்கிருதத்தில் இணை எழுத்துக்கள்   Sandhyakshara_grantha ஸந்த்⁴யக்ஷரம் सन्ध्यक्षरम् என்று குறிப்பிடப்படுகிறது

 

தமிழில் ஐ (அ+இ), ஔ (அ+உ) ஆகிய இரண்டு மட்டுமே இணை எழுத்துக்களாக கருதப்படுகின்றன.

 

ஆனால் சமஸ்கிருதத்தில்,

 

diphthong_grantha

ஏ ஐ ஓ ஔ | ए ऐ ओ औ

 

மேற்கண்ட நான்கும் ஸந்த்⁴யக்ஷரங்கள் ஆகும். இவை இரண்டு ஸ்வரங்களின் ஸந்தி⁴யினால் (புணர்ச்சி) உருவாகின்றன என்பது இவற்றுக்கு ஸந்தி⁴ அக்ஷரங்கள் என்று பெயர்.

 

a-granthai_granthae_grantha

a-granthau_granthao_grantha

அ + இ = ஏ | अ + इ = ए

அ + உ = ஒ | अ + उ = ओ

 

aa-granthai_granthaai_grantha

aa-granthau_granthaau_grantha

ஆ + இ = ஐ | आ + इ = ऐ

ஆ+ உ = ஔ | आ + उ = औ

 

சார்பெழுத்து : அயோக³வாஹம்

தமிழில் சார்பெழுத்துக்கள் என்றழைக்கப்படுபவை, சமஸ்கிருதத்தில் ayogavaha_grantha அயோக³வாஹ: अयोगवाहः – அயோக³வாஹம் என்று அழைக்கப்படுகிறது. அயோக³வாஹங்கள் தனித்து இயங்காது, ஸ்வரங்களை சார்ந்தே இயங்கும்.

 

சமஸ்கிருதத்தில் நான்கு அயோகவாஹங்கள் உள்ளன :

 

  • anusvara_grantha அநுஸ்வார: अनुस्वारः – அனுஸ்வாரம்
  • visarga_grantha விஸர்க³ विसर्गः – விஸர்க³ம்
  • jihvamuliya_grantha ஜிஹ்வாமூலீய: जिह्वामूलीयः – ஜிஹ்வாமூலியம்
  • upadhmaniya_grantha உபத்⁴மாநீய: उपध्मानीयः – உபத்⁴மானீயம்

 

ஜிஹ்வாமூலீயமும் உபத்⁴மானீயமும் ardha_visarga_grantha அர்த⁴விஸர்க³: अर्धविसर्गः “அர்த⁴-விஸர்க³ம்” (அரை-விஸர்க³ம்) என்ற ஒரே குறியீட்டின் மூல சுட்டப்பெறும்.

 

ஆக, அயோக³வாஹங்களுக்கு மூன்று குறியீடுகள் :

 

ayogavaha_list_grantha

அம்ʼ அ: அ(:) | अं अः अ(:) 

 

அனுஸ்வாரம்

அனுஸ்வராம், மகர மெய்யின் சப்தத்தை நெருங்கிய சப்தத்தை கொண்டது. ஆயினும், மகரத்தைப் போல், உதடுகள் சேராத மூக்கொலி. [ மகரம் உதடுகள் சேர்ந்து எழும் மூக்கொலி (Bilabial Nasal) ]

 

விஸர்க³ம்

விஸர்க³த்தின் பயன், ஸ்வரத்தின் மாத்திரையில் பாதியாக வரக்கூடிய ஹகாரத்தை இணைப்பது.

 

அதாவது,  namaH-grantha நம‍: नमः  – என்பதை நம(ஹ) என்று உச்சரித்தல் வேண்டும். இதில் (ஹ) என்பது அகரத்தின் பாதி மாத்திரையின் அளவில் உச்சரிக்கபப்ட வேண்டும். hariH-grantha ஹரி: हरिः – என்பதை ஹரி(ஹி) என்று உச்சரிக்க வேண்டும். மேலே உள்ளது போல (ஹி) என்பது இகரத்தின் பாதி மாத்திரை அளவு தான் உச்சரிக்க வேண்டும்.

 
அதே போல, budddhaah_grantha புத்தா: बुद्धाः என்பது புத்தா(ஹ) என்ற ஒரு மாத்திரை அளவுடன் கூடன் ஹகாரத்துடன் உச்சரிக்க வேண்டும்.
 

அர்த⁴ விஸர்க³ம்

ஏற்கனவே, கூறினாற்போல இது இரு சப்தங்களை குறிக்கிறது. ஒன்று ஜிஹ்வாமூலீயம், இன்னொன்று உபத்⁴மானீயம்.

 

விஸர்கமானது, ka_kha_granthaக க² क ख ஆகிய அக்ஷரங்களுக்கு அடுத்து வந்தால், இது “ஜிஹ்வாமூலீயம்” என்ற ஒலியாக மாறுகிறது. இது தமிழின் “ஃ” ஆய்த எழுத்தின் உச்சரிப்பை கொண்டது. இதை [x] Voiceless Velar Fricative என்பர். 

 

jihva_muliya_grantha

 

அதே போல, விஸர்கம்  pa_pha_grantha ப ப² प फஆகிய அக்ஷரங்களுக்கு அடுத்து வந்தால், இது “உபத்⁴மானீயம்” என்ற ஒலியாக மாறுகிறது. இது ஆங்கில ”f”க்கு நெருங்கிய உச்சரிப்பை கொண்டது. இதை [ɸ] Voiceless Bilabial Fricative என்பர். 

 

upadhmaniya_grantha

 

உபத்மானீயம் ஜிஹ்வாமூலீயம் ஆகிய இரண்டுமே அர்த விஸர்க குறியீட்டால் சுட்டப்படுவதால், அர்த விஸர்கம் வரும் இடத்தை பொருத்தே அது ஜிஹ்வாமூலீயமா அல்லது உபத்மானீயமா என்று முடிவு செய்ய இயலும்.

 

ஆக, இத்துடன் ஸ்வரங்கள் மற்றும் அயோக³வாஹங்கள் குறித்த விபரங்கள் முடிந்தன. அடுத்து வ்யஞ்ஜனங்கள் (மெய்யெழுத்துக்கள்) குறித்தும் இன்னும் இரண்டு குறியீடுகள் குறித்தும் அடுத்த பதிவில் பார்ப்போம். 

 

(இவை எல்லாம் ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுதியது தான் என்றாலும், ஒரு முழுமைக்காக தமிழில் மீண்டும் எழுதுகின்றேன்)

 


குறிப்பு:

 

சமஸ்கிருதத்தில், அகார-விஸர்கத்துடன் வரும் சொற்கள், அவை நபர்கள் குறித்தால் ஒழிய, தமிழில் மகர மெய்யுடன் சேர்த்தே எழுதப்படுகிறது. Svarah-grantha ஸ்வர(ஹ) என்று சமஸ்கிருதத்தில் வழங்கினாலும், அது தமிழில் “ஸ்வரம்” என்று வழங்கப்படுகிறது. இந்த அகார-விஸர்கம் ஆண்பாலை குறிக்கிறது. [ ஃப்ரெஞ்சு மொழியை போல சமஸ்கிருதத்தில் அனைத்து சொற்களுக்கும் பால் உண்டு ]

 

அதே சமயத்தில், சமஸ்கிருதத்தில் ‘ம’கர மெய்யுடன் முடியும் சொற்களும் அதே போல மகர மெய்யுடனே தமிழில் வழங்கப்படுகிறது. இது ஒன்றன்பாலை குறிக்கிறது. உதாரணம்,aksharam-grantha அக்ஷரம்

 

ஆகவே, இரண்டையும் தமிழில் மகர மெய்யுடனே இந்த பதிவில் எழுதினாலும், மூல சமஸ்கிருத வடிவை கிரந்தாக்ஷரத்தை கண்டு தெரிந்து கொள்க.


One thought on “கற்போம் ஸம்ʼஸ்க்ருʼதம் – 1 – உயிரெழுத்துக்களும் சார்பெழுத்துக்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *